ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ,ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மெல்போர்னில் புதன்கிழமை 104 டிகிரி பாரன் ஹீட் வெயில் வெளுத்து வாங்கியது. கடும் உஷ்ணத்துக்கு மத்தியில் 2-வது சுற்றில் விளையாடிய ஜோகோவிச் 6-0, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயரைத் தோற்கடித்தார். தனது புதிய பயிற்சியாளரான போரீஸ் பெக்கர் முன்னிலையில் விளையாடிய ஜோகோவிச், ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ச்சியாக 23-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய ஜோகோவிச், “குளூட்டன் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதால் சிறப்பாக ஆட முடிகிறது. நல்ல முதிர்ச்சியடைந்திருப்பதோடு, உடல் வலிமையையும் பெற்றிருக்கிறேன். என்னுடைய உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன். அது ஆண்டு முழுவதும் எனது உடற்தகுதியை நல்ல நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது” என்றார்.
டோடிக்கை வெளியேற்றிய வெயில்
ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-4, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் டி செப்பரையும், பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் 7-6(3), 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் நிகோலாய் டேவிடென்கோவையும் வீழ்த்தினர்.
சர்வதேச தரவரிசையில் 32-வது இடத்தில் இருப்பவரான குரேஷியாவின் இவான் டோடிக், 188-வது இடத்தில் இருக்கும் போஸ்னிய வீரர் டேமிர் தும்ஹரை சந்தித்தார். இந்த ஆட்டத்தில் டோடிக் 6-4, 6-4, 3-6, 1-4 என நிலையில் இருந்தபோது கடும் வெயிலின் காரணமாக போட்டியிலிருந்து விலகினார். அடுத்த அரை மணி நேரம் அவரால் நடக்கக்கூட முடியவில்லை. இது தொடர்பாக அவர் கூறுகையில், “உடலில் உள்ள நீர் முழுவதுமாக வெளியேறியிருக்கலாம். அதனால் நாம் உயிரிழந்துவிடுவோமோ என்ற பயம் எனக்குள் எழுந்துவிட்டது” என்றார்.
யூஸ்னி அதிர்ச்சி தோல்வி
உலகின் 14-ம் நிலை வீரரான ரஷியாவின் மிகைல் யூஸ்னி தனது 2-வது சுற்றில் 4-6, 6-3, 3-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 37-வது இடத்தில் உள்ள பிரிட்டனின் புளோரியன் மேயரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 7-6 (2), 5-7, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் அட்ரியான் மேனரினோவையும், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 7-5, 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்தின் ஜார்க்கோ நிமினினெனையும் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
செரீனா வெற்றி
மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியாவின் வெஸ்னா டோலனைத் தோற்கடித்தார். 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல காத்திருக்கும் செரீனா வெற்றி குறித்துப் பேசுகையில், “கடும் வெயில் காரணமாக இங்கு விளையாடுவது கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் உஷ்ணத்தின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது. இங்குள்ள ரசிகர்கள் கூட்டத்தின் முன்னிலையில் விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
சீனாவின் லீ நா தனது 2-வது சுற்றில் 6-0, 7-6 (5) என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச்சை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தொடர்ந்து 5-வது ஆண்டாக 3-வது சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் லீ நா.
2-வது சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதை ஒப்புக்கொண்ட லீ நா, “ஒவ்வொரு நாளும் வித்தியாசமானது. எனவே எல்லா நாளும் 100 சதவீதம் சிறப்பாக விளையாடுவேன் என சொல்ல முடியாது. ஆனால் எல்லா நாள்களிலும் 60 முதல் 65 சதவீதம் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார். ஜெர்மனியின் சபைன் லிசிக்கி 2-6, 5-7 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் மோனிகா நிகுலெஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
கனடாவின் யூஜீனி புச்சார்டு 6-2, 7-6 (10) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் விர்ஜின் ரேஸனோவையும், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ரஷியாவின் குட்ரியாவ்ட்சேவாவையும், செர்பியாவின் அனா இவானோவிச் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் அன்னிகா பெக்கையும் தோற்கடித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago