595 ரன்கள் எடுத்த வங்கதேசம் அதிர்ச்சித் தோல்வி: நியூஸிலாந்து அபார வெற்றி

By ராமு

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

முதல் இன்னிங்சில் ஷாகிப் அல் ஹசன் (217) முஷ்பிகுர் (159) ஆகியோரது சாதனை கூட்டணியுடன் 595 ரன்கள் குவித்த வங்கதேசம் பிற்பாடு நியூஸிலாந்து அணியை 539 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 56 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இந்நிலையில் 2-வது இன்னிங்சில் கொஞ்சம் அதீத நம்பிக்கையுடன் ஆடிய வங்கதேசம் 4-ம் நாள் ஆட்டம் 66/3 என்ற நிலையிலிருந்து 160 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு 7 ஓவர்கள் சென்று வங்கதேசம் ஆட்டமிழக்க, நியூஸிலாந்து அணிக்கு வெற்றி இலக்கு 57 ஓவர்களில் 217 ரன்கள் என்று அமைந்த்து. இதனை அதிரடி முறையில் ஆடிய நியூஸிலாந்து 39.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எடுத்து வெற்றி கண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இந்த விரட்டலில் கேன் வில்லியம்சன் 90 பந்துகளில் 15 பவுண்டரிகலுடன் 104 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ராஸ் டெய்லர் 77 பந்துகளில் 6 பவுண்டர்களுடன் 60 ரன்கள் எடுத்தார். 39/2 என்ற நிலையிலிருந்து இவர்கள் இருவரும் இணைந்து ஸ்கோரை 202 ரன்களுக்கு உயர்த்தினர். வங்கதேசம் தரப்பில் அருமையான ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஜ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வங்கதேச அணியில் நல்ல பார்மில் இருக்கும் முஷ்பிகுர் ரஹிம் 5-ம் நாளான இன்று காலை, 43-வது ஓவரில் சவுதி பவுன்சரில் பின்பக்க ஹெல்மெட்டில் இடது காதுக்கு அருகே அடி வாங்கி, மைதானத்தில் விழுந்தார், வலியால் துடித்த அவர் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் 13 ரன்கள் எடுத்திருந்தார். பந்திலிருந்து கண்களை எடுத்ததால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

66/3 என்ற நிலையில் இன்று 5-,ம் நாள் களமிறங்கிய வங்கதேசம் ஷாகிப் அல் ஹசனின் மோசமான, அதி நம்பிக்கை, பொறுப்பற்ற ஷாட்டினால் நிலைகுலைவு கண்டது, சாண்ட்னரிடம் டக் அவுட் ஆனார் இந்த இரட்டைச் சத வங்கதேச நாயகன். மொமினுல் ஹக் ஆட்டமிழக்க 96/5 என்று ஆனது வங்கதேசம், அதன் பிறகுதான் முஷ்பிகுர் காயமடைந்து வெளியேறினார். அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று மருத்துவர்கள் கூறியதையடுத்து பெவிலியனில் இருந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சபீர் ரஹ்மான் 51 நிமிடங்கள் ஸ்கோர் எடுக்காமல் நின்றிருந்தார். பிறகு ஷாட்களை ஆடி 109 பந்துகளில் 2-வது இன்னிங்சிலும் அரைசதம் கண்டு போல்ட் பந்தில் வெளியேறினார். காயமடைந்த இம்ருல் கயேஸ் மீண்டும் இறங்கி 36 நாட் அவுட் என்று முடிய கடைசி 4 விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்தது வங்கதேசம். 160 ரன்களுக்குச் சுருண்டதில் சாண்ட்னர், வாக்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த போல்ட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

வெற்றி இலக்கு 217ரன்களை 57 ஓவர்களில் அடிக்கும் முனைப்புடன் களமிறங்கிய நியூஸிலாந்து, மெஹதி ஹசன் ஆஃப்ஸ்பின்னுக்கு ஜீத் ராவல், டாம் லாதமை தேநீர் இடைவேளைக்கு முன்பாக இழந்தது. ஆனால் அதன் பிறகு வங்கதேசம் மிக மோசமாக பந்து வீசியது, 2-வது இன்னிங்ஸ் அதிர்ச்சியிலிருந்து அந்த அணி மீளவில்லை, இனியும் மீள வாய்ப்பில்லை என்பது போல் ஆடியது, வில்லியம்சன் சாத்துமுறை சதமெடுத்தார்.

595 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்று முதல் இன்னிங்ஸில் கெத்தாக டிக்ளேர் செய்து கடைசியில் பரிதாபமாக தோல்வி அடைந்தது வங்கதேசம், இந்தத்தோல்வியிலிருந்து மீள அந்த அணிக்கு நாட்களாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்