முதல் டி20: மே.இ.தீவுகளை பந்தாடிய மெக்கல்லம், ரோஞ்சி

By செய்திப்பிரிவு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸிலாந்து.

நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் 45 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், விக்கெட் கீப்பர் லியூக் ரோஞ்சி 25 பந்துகளில் 4 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 48 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் சனிக் கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில், டினோ பெஸ்ட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகளை விரட்டி அதிரடியைத் தொடங்கினார். அவர் 16 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து டினோ பெஸ்ட் வீசிய 2-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜெஸ்ஸி ரைடர் 22 ரன்களிலும், பின்னர் வந்த ராஸ் டெய்லர் 5, காலின் மன்றோ 22, கோரே ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, 12.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது நியூஸிலாந்து.

இதன்பிறகு கேப்டன் மெக்கல்லமும், லியூக் ரோஞ்சியும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மேற்கிந்தியத் தீவுகளின் பௌலர்களை பந் தாடியது. ஆன்ட்ரே ரஸல் வீசிய 15-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் சிக்ஸர் அடிக்க, 3, 4, 5-வது பந்துகளில் முறையே சிக்ஸர், பவுண்டரி, சிக்ஸரை விளாசினார் ரோஞ்சி. தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய ரோஞ்சி, சுனில் நரேன் வீசிய 17-வது ஓவரில் 2 சிக்ஸர்களையும், 2 பவுண் டரிகளையும் விரட்டினார். டினோ பெஸ்ட் வீசிய கடைசி ஓவரில் மெக்கல்லம் இரு சிக்ஸர்களை விளாச, நியூஸிலாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 60, ரோஞ்சி 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 7.1 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் லென்ட் சிம்மன்ஸ் ரன் ஏதுமின்றியும், ஜான்சன் சார்லஸ் 16 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சுனில் நரேன் 15, பத்ரி 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக பிளெட்சர் 23 ரன்கள் எடுத்தார்.

50-வது டி20 போட்டியில் விளையாடிய நாதன் மெக்கல்லம் 4 ஓவர்களில் 24 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நீஷம் 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஞ்சி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்