ஜப்பான் கிராண்ட்ப்ரீ ஃபார்முலா 1 கார் பந்தயத்தில் மெர்ஸிடஸ் டிரைவர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடத்தைப் பிடித்தார்.
2014 சீசன் ஃபார்முலா 1 கார் பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளைக் கொண்டதாகும். அதன் 15-வது சுற்று ஜப்பானின் சுஸூகா நகரில் நேற்று நடைபெற்றது.
புயல் காற்று காரணமாக பெய்த கனமழைக்கு நடுவே நடைபெற்ற இந்தப் போட்டியில் மருஷியா பெராரி டிரைவர் ஜூலஸ் பியான்ஸி விபத்துக்குள்ளானதால் போட்டி முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.
இதில் 2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட லீவிஸ் ஹாமில்டன் 1 மணி, 51 நிமிடம், 43.021 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.
முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட மற்றொரு மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் 2-வது இடத்தையும், நடப்பு சாம்பியனான ரெட்புல் டிரைவர் செபாஸ்டியன் வெட்டல் 3-வது இடத்தையும் பிடித்தனர்.
இந்த சீசனில் 8-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள லீவிஸ் ஹாமில்டன், டிரைவர்கள் வரிசையில் 266 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நிகோ ரோஸ்பெர்க் 256 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரெட்புல் டிரைவர் ரிச்சியார்டோ 193 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
நடப்பு சாம்பியனான வெட்டல் 139 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். இன்னும் 4 ரேஸ்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், வெட்டல் சாம்பியனாகும் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
சாம்பியன் பட்டம் வெல்வதில் ஹாமில்டன், ரோஸ்பெர்க் இடையேதான் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago