உடல் தகுதியை சீராக வைத்திருங்கள் இல்லையேல் வெளியேறுங்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அரசு எச்சரிக்கை

3 மாதங்களுக்குள் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் உடல்தகுதியை மேம்படுத்த வேண்டும் இல்லையெனில் வெளியேற்றப்படுவார்கள் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

வெள்ளியன்று ஜிம்பாப்வேவுக்கு எதிராக தொடங்கும் தொடருக்கு இலங்கை அணி வீரர்கள் உடல் தகுதிநிலை திருப்திகரமாக இல்லாததையடுத்து இலங்கை அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

“எந்த வீரரும் திருப்திகரமான உடல்தகுதியில் இல்லை” என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறீ ஜெயசேகரா தெரிவித்தார்.

தேசிய அணியை தனிப்பட்ட குழுவினர் தேர்வு செய்தாலும் விளையாட்டு அமைச்சர் அந்த அணிக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது அங்கு கட்டாயமாகும்.

துஷ்மந்த சமீரா மற்றும் லாஹிரு மதுஷங்கா ஆகிய இரண்டு வீரர்கள்தான் யோ-யோ ஓட்ட பரிசோதனையில் திருப்திகரமான உடல்தகுதியில் இருப்பதாக தெரியவந்தது. அதாவது ஒரு 20 அடி தூரத்தை பல்வேறு விதமான வேகத்தில் ஓடித் திரும்ப வேண்டும் இவ்வகையான ஓட்ட பரிசோதனையில் பல்வேறு நிலைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் லஷித் மலிங்கா 80 கிலோ எடை உடையவர், ஒரு சோதனையில் தேறாமல் போனார்.

உடலில் கொழுப்பின் அளவு கிரிக்கெட் வீரருக்கு 16% இருக்க வேண்டும் ஆனால் இலங்கை வீரர்களில் பலருக்கு 26% இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயசேகரா தெரிவித்தார். எனவே 16%-க்கு மேல் உடல் கொழுப்பு அளவு இருந்தால் அவர் அணியில் விளையாட முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE