ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரையான் ஹாரிஸ், ஆஸ்தி ரேலிய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தென் ஆப்ரிக்கச் சுற்றுப்பயணத்துக்கு அவர் பந்துவீச்சுப் பயிற்சி யாளராகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லேமன், உதவிப் பயிற்சியாளர் டேவிட் சாகர் ஆகியோருடன் இணைந்து அவர் பணிபுரிய உள்ளார்.
36 வயதான ஹாரிஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 27 டெஸ்டுகளில் விளையாடி 113 விக்கெட்களும், 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்களும் கைப்பற்றியுள் ளார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்ட அவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டி களில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த சீசனில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியாளராக பணியாற் றினார்.
ஆஸ்திரேலிய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago