ஜோஹார் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு

By பிடிஐ

ஜோஹார் கோப்பை ஹாக்கிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று நாடு திரும்பிய 21 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஹாக்கி அணிக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மலேசியாவில் நடைபெற்ற ஜோஹார் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அதைத் தொடர்ந்து நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய வீரர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஹாக்கி ஆர்வலர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அதிக கோலடித்து தொடர் நாயகன் விருதை தட்டி வந்த ஹர்மான்பிரீத் சிங் கூறுகையில், “அணியில் இடம்பெற்றிருந்த நாங்கள் அனைவரும் ஒருவரை யொருவர் நன்றாக புரிந்துகொள் வதற்கு இந்த போட்டி பெரிய அளவில் உதவியது. இனிவரும் காலங்களில் நாங்கள் எதிர் கொள்ளவிருக்கும் சவால்களை சந்திப்பதற்கான ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த போட்டி தந்திருக்கிறது.

ஒவ்வொரு வீரரும் தனிப்பட்ட முறையில் முயற்சி மேற்கொண்டது மட்டுமின்றி, அனைவரும் ஒட்டுமொத்த அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தினோம். அதனால் எதிரணியினரின் தாக்குதல் ஆட்டத்தை தடுத்து நிறுத்த முடிந்தது” என்றார்.

ஹர்மான்பிரீத்தின் செயல்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் தொடர்நாயகன் விருதை வெல்வேன் என்று போட்டியின் தொடக்கத்தில் நினைக்கவில்லை. ஆனால் போட்டியின் முடிவில் அதிக கோலடித்து தொடர்நாயகன் விருது வென்றது எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்