மாற்றுத்திறனாளி மாணவர்களை சந்தித்தார் பயஸ்

By செய்திப்பிரிவு

சென்னை கிண்டி சி.ஐ.டி வளாகத்திலுள்ள தொழிற்கல்வி மறுவாழ்வு மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்தினாளி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு ஏர்செல் நிறுவனம் சார்பில் “ஏ+” என்னும் திறன் வளர்ச்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏர்செல் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

மாணவர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பார்வையிட்ட லியாண்டர் பயஸ் அவர்களுடன் அரை மணி நேரத்திற்கு மேலாக கலந்துரையாடினார். மாற்றுத்திறனாளி மாணவர்கள் மட்டுமன்றி அரசுப்பள்ளி மாணவர்களும் அந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் லியாண்டர் பயஸ் தனது கையொப்பமிட்ட டென்னிஸ் பந்துகளை கொடுத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

இதுபற்றி லியாண்டர் பயஸ் கூறுகையில், “மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏராளமான திறமைகள் உள்ளன.அவர்களது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பிரம்மிக்க வைக்கிறது.இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்