1900 பாரீஸ் ஒலிம்பிக்: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நார்மன்

By பெ.மாரிமுத்து

நவீன ஒலிம்பிக்கின் 2-வது போட்டி 1900-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்றது. மே 14-ம் தேதி முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்க மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே நடத்தப்பட்ட இந்த ஒலிம்பிக்கில் 19 வகையான விளையாட்டுகளில் 95 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 24 நாடுகளைச் சேர்ந்த 997 பேர் கலந்து கொண்டனர். முதல்முறையாக மகளிருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கைப் போலவே இந்தப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வழங்கப்படவில்லை என்றாலும், சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மாற்றம் கொண்டு வந்ததையடுத்து, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. அதன்படி போட்டியை நடத்திய பிரான்ஸ் 26 தங்கம், 41 வெள்ளி, 34 வெண் கலம் என மொத்தம் 101 பதக்கங் களுடன் முதலிடத்தைப் பிடித்தது. அமெரிக்கா 19 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம் என 47 பதக்கங் களுடன் 2-வது இடத்தையும், இங்கிலாந்து 15 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.

400 புறாக்கள் பலி

துப்பாக்கிச் சுடுதலில் டிராப் ஷூட்டிங் பிரிவில் இலக்காக இப்போது பொறியை பறக்கவிட்டு அதை சுடுகிறார்கள். ஆனால் பாரீஸ் ஒலிம்பிக்கில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. போட்டியின்போது புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அதில் அதிக புறாக்களை சுட்டுக் கொன்றவர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியின்போது 400 புறாக்கள் சுட்டுக் கொல்லப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் பிராணிகள் கொல்லப்பட்ட ஒரே போட்டி பாரீஸ் ஒலிம்பிக்தான் என்ற வேதனையான வரலாறும் உள்ளது. புறாக்கள் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த பிராணிகள் நல அமைப்புகள், துப்பாக்கிச் சுடுதல் போட்டியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

முதல் பெண் சாம்பியன்

ஒலிம்பிக் போட்டியின் முதல் பெண் சாம்பியன் அமெரிக்காவின் ஹெலன் போர்டேல்ஸ் ஆவார். அப்போது 32 வயதான ஹெலன், தனது கணவர் மற்றும் மருமகனுடன் இணைந்து படகுப் போட்டியில் சாம்பியன் ஆனார். அதேநேரத்தில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் நபர் இங்கிலாந்தின் டென்னிஸ் வீராங்கனை சார்லோட்டே கூப்பர் ஆவார்.

நார்மன் பிரிட்சார்ட்

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக அடியெடுத்து வைத்தது. இந்தியா சார்பில் தடகள வீரர் நார்மன் பிரிட்சார்ட் கலந்து கொண்டார். அந்த சமயம் இந்தியா, இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்ததால் கொடியில் இங்கிலாந்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த கொடியின் கீழ் தான் பிரிட்சார்ட் போட்டிகளில் பங்கேற்க நேரிட்டது.

இங்கிலாந்து தம்பதியருக்கு மகனாக கொல்கத்தாவின் அலிபூரில் பிறந்தவர் தான் இந்த பிரிட்சார்ட். ஒலிம்பிக்கில் 5 வகையான போட்டிகளில் கலந்து கொண்ட இவர் 200 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் தடை ஓட்டங்களில் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 110 மீட்டர் தடை ஓட்டம், 60 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டத்தில் இவரால் ஜொலிக்க முடியவில்லை.

நார்மன் பிரிட்சார்ட் தனது கல்லூரிப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் முடித்தார். நார்மன் சிறந்த கால்பந்து வீரரும் கூட. திறந்த வெளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனையும் புரிந்துள்ளார் நார்மன். 1897-ல் கல்லூரி அணிகள் இடையேயான ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

மேலும் வங்காள மாகாணத்தில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் 1894 முதல் 1900-ம் வரை தொடர்ச்சியாக 7 முறை பட்டம் வென்றும் சாதனை புரிந்துள்ளார். 1900 முதல் 1902 வரை இந்திய கால்பந்து சங்க செயலாளர் பதவியையும் நார்மன் வகித்துள்ளார். 1900-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார்.

440 யார்டு, 100 யார்டு, 200 யார்டு தடை தாண்டும் ஓட்டங்களில் முதலிடம் பிடித்தார். இதன் மூலமே அவர் 1900 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானார். ஒலிம்பிக் போட்டியில் இரு பதக்கங்கள் வென்ற நார்மனை இங்கிலாந்து சொந்தம் கொண்டாடினாலும் அவர் இந்தியாவின் சார்பில் பங்கேற்றவர் என்றே சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன பதிவேட்டில் உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இந்தியா திரும்பிய நார்மன் 1905-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு குடிபெயர்ந் தார். அதன் பின்னர் அங்கிருந்து அமெரிக் காவுக்கு இடம் மாறி ஹாலிவுட்டில் கால்பதித்தார். நார்மன் டிரெவர் என்ற பெயருடன் ஹாலிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். புகழ்பெற்ற நடிகரான ரொனால்டு கோல்மேனுடன் இணைந்து பியூ கெஸ்ட், டேன்சிங் மதர்ஸ், டுநைட் அட் டுவெல் ஆகிய படங்களில் நார்மன் நடித்துள்ளார். 1926-ல் மூளை சம்பந்தமான நேயால் பாதிக்கப்பட்ட நார்மன், கலிபோர் னியா நகரில் மரணமடைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்