மலேசிய ஓபன்: சாய்னா, சிந்து தோல்வி

By செய்திப்பிரிவு

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் 2-வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் சர்வதேச தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சாய்னா 21-10, 10-21, 19-21 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 25-வது இடத்தில் உள்ள சீனாவின் யாவ் ஸுவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். கடந்த ஆண்டில் ஒரு பட்டம்கூட வெல்லாத சாய்னா நெவால், இந்த ஆண்டில் பங்கேற்ற முதல் போட்டியான மலேசிய ஓபனில் 2-வது சுற்றோடு வெளியேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சிந்து 16-21, 19-21 என்ற நேர் செட்களில் கொரியாவின் இயோன் ஜு பேவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டம் 45 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்