ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணி, அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அப்படி தொடரை வெல்லாத பட்சத்தில் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா அல்லது மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த இடத்தைத் தட்டிப் பறிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
இந்திய அணி அடுத்த வாரத்தில் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் தோனி தலைமையிலான அணி ஒருநாள் தொடரை வென்றால் மட்டுமே தரவரிசையில் நம்பர் 1 என்ற இடத்தை தக்கவைக்க முடியும்.
பொதுவாக அன்னிய மண்ணில் இந்திய அணி ஜொலிப்பது அரிது. சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் இந்திய வீரர்களின் ஆட்டம் எதிர்பார்த்ததுபோல வெற்றிகரமானதாக இல்லை.
இந்த சூழ்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் இந்திய வீரர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இப்போதைய நிலையில் ஒருநாள் தரவரிசையில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 114 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 111 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவைவிட வெறும் 6 புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா கடந்த ஜூலை 2012-ல் முதலிடத்தில் இருந்தது.
அப்போது ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து பின்னுக்குதள்ளி முதலிடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு இறுதிவரை இங்கிலாந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தது.
இந்தியாவை பின்னுக்குத் தள்ள வேண்டுமானால் ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒருசில வெற்றிகள் தேவை. அதே நேரத்தில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா இழந்தால், ஆஸ்திரேலியா முதலிடத்தைப் பிடிப்பது மிகவும் எளிதாகிவிடும்.
வீரர்கள் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்திய அணியின் விராட் கோலி அதிகபட்சமாக 2-வது இடத்தில் உள்ளார். ஷீகர் தவாண் 10-வது இடத்தில் உள்ளார். இந்த இரு பேட்ஸ்மேன்களும்தான் டாப் 10 பேர் பட்டியலில் உள்ள இந்திய வீரர்கள்.
பந்து வீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 6-வது இடத்தில் உள்ளார். அஸ்வின் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா 5-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago