குஜராத் தடகள வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறார் பி.டி.உஷா: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றார்

By செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு குஜராத் சென்று அம்மாநில தடகள வீரர்களுக்கு பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளார் இந்தியாவின் தங்க மங்கை பி.டி.உஷா.

கேரளத்தை சேர்ந்த அவருக்கு அம்மாநில அரசு சில நாள்களுக்கு முன்புதான் சிறந்த தடகள பயிற்சியாளருக்கான விருதை அளித்தது. முன்னதாக கடந்த ஆண்டு குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தங்கள் மாநில தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்குமாறு உஷாவுக்கு அழைப்பு விடுத்தார். அப்போது குஜராத் சென்றிருந்த உஷா, வதோதராவில் அம்மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்த உள்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.

இப்போது குஜராத் சென்று பயிற்சியளிக்க அவர் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் 9 முதல் 14-ம் தேதி வரை குஜராத்தில் 9 இடங்களில் முகாம்களை நடத்தி தடகள வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறேன். வதோதராவில் உள்ள பயிற்சி கூடத்தில் சர்வதேச தரத்திலான வசதிகள் உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்