நியூஸிலாந்தின் மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற 3-வது, கடைசி டி20 போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்திய நியூஸிலாந்து ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றியது போலவே டி20 தொடரிலும் 3-0 என்று வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை எடுத்தது. கோரி ஆண்டர்சன் ஒருநாள் போட்டிகளில் 2014-ல் 36 பந்துகளில் சதம் அடித்தார், இன்று அதிவேகே டி20 சதத்திற்கான சாதனையையும் சொந்தமாக்கிக் கொண்டிருப்பார், ஆனால் 20 ஓவர்களுக்குள் அதைச் செய்ய முடியவில்லை. காரணம் 20-வது ஓவர் தொடங்கும் போது 79 ரன்களில் இருந்த ஆண்டர்சன் மேலும் 2 சிக்சர்களுடன் 15 ரன்களையே எடுக்க முடிந்தது.
இதனால் 41 பந்துகளில் 2 பவுண்டரிகள் 10 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்து டி20 போட்டிகளில் அதிக சிக்சர்களுக்கான நியூஸிலாந்து சாதனை நிகழ்த்தினார் கோரி ஆண்டர்சன். முன்னதாக கேப்டன் கேன் வில்லியம்சன் 57 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 60 ரன்கள் எடுத்தார்.
195 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. சவுமியா சர்க்கார் அதிகபட்சமாக 42 ரன்களையும் ஷாகிப் அல் ஹசன் 41 ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் தோல்வி அடைந்து வங்கதேசம் டி20 தொடரிலும் முற்றொழிப்பு செய்யப்பட்டது.
டாஸ் வென்று வங்கதேசம் முதலில் நியூஸிலாந்தை பேட் செய்ய அழைத்ததில் தவறில்லை, காரணம் 6.1 ஓவர்களில் நியூஸிலாந்து 41/3 என்று திணறியது. முன்னதாக ரூபல் ஹுசைன், ஜேம்ஸ் நீஷம், அதிரடி மன்ரோ ஆகியோரை 5 பந்து இடைவெளியில் பெவிலியன் அனுப்பினார்.
வில்லியம்சன் ஷபிள் செய்து ஆடினார், மைதானத்தின் மேற்கூரைக்கு ஒரு சிக்சரையும் 14-வது ஓவரில் ஸ்கொயர்லெக்கில் பவுண்டரியும் அடிக்க 14-வது ஓவரில் ஸ்கோர் 100 ரன்களைக் கடந்தது. இங்கிருந்து ஆண்டர்சன் காட்டடி தர்பாரைத் தொடங்கினார். மஷ்ரபே மோர்டசா சிக்க 4 பந்துகளில் 17 ரன்கள். சவுமியா சர்க்கார் ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்கள். இதில்தான் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார். இன்னொரு சிக்ஸர் மிகவும் வெறித்தனமான அடி, பந்து தாய்லாந்து உணவு ஸ்டாலில் போய் விழுந்தது. டஸ்கின் அகமதுவை தனது 9-வது சிக்சருக்காக தூக்கி அடித்த கோரி ஆண்டர்சன் அதிக சிக்சர்களுக்கான நியூஸிலாந்து சாதனையை நிகழ்த்தினார்.
அதாவது 2010-ல் ஆஸ்திரேலியாவை பிரெண்டன் மெக்கல்லம் புரட்டி எடுத்த போது 8 சிக்சர்களை அடித்ததே சாதனையாக இருந்தது. கடைசி பந்தையும் லாங் ஆனுக்கு சிக்சராக விரட்டி ஹீரோவாக நடந்து சென்றார் கோரி ஆண்டர்சன். கடைசி 6 ஓவர்களில் 90க்கும் அதிகமான ரன்களுடன் நியூஸி. 194 ரன்களுடன் முடித்தது.
வங்கதேசம் தரப்பில் ஷாகிப் அல் ஹசன் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களி 22 ரன்கள் என்று சிக்கனம் காட்டினார். ரூபெல் ஹுசைன் 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய வங்கதேசம் தமிம் இக்பால் (14), சவுமியா சர்க்கார் (42) மூலம் 4.4 ஓவர்களில் 44 பிறகு 6 ஓவர்களில் 69/ என்று அருமையான தொடக்கத்தை வங்கதேசம் தொடர்ந்து இன்றும் வீணடித்தது. சவுமியா சர்க்கார், இஷ் சோதி பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்தார். சபீரை வில்லியம்சன் பவுல்டு செய்தார். மஹமுதுல்லாவுக்கு இஷ் சோதி வீசிய கூக்ளி அருமையானது. அதாவது ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேர் பிட்ச் ஆகி லெக் ஸ்டம்பைத் தாக்கியது.
ஷாகிப், நுருல் இணைந்து பவுண்டரிகள் சிலதை அடித்தாலும் வெற்றி பெறுவதற்கு அருகில் வங்கதேசம் வர முடியவில்லை. 167-ல் முடிந்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி, டிரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சாண்ட்னர், கேன் வில்லியம்சன் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
தொடரை 3-0 என்று இழந்து வங்கதேசம் நியூஸிலாந்து தொடரில் முற்றிலும் ஒழிக்கப்பட்ட அணியாக நாடு திரும்புகிறது. ஆட்ட நாயகன் கோரி ஆண்டர்சன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago