மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஏற்கெனவே தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்துக்கு இந்த வெற்றி ஆறுதலாக அமைந்தது.
பர்படாஸில் பிறந்தவரான கிறிஸ் ஜோர்டான் 9 பந்துகளில் 27 ரன்கள் குவித்ததோடு, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்துக்கு வெற்றி தேடித்தந்தார்.
மைக்கேல் லம்ப் விளாசல்
பர்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் லம்ப்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கிய மைக்கேல் லம்ப், காட்ரெல் வீசிய ஆட்டத்தின் 2-வது ஓவரில் ஹாட்ரிக் உள்பட 4 பவுண்டரிகளை விளாச, முதல் 4 ஓவர்களில் 52 ரன்களை எட்டியது இங்கிலாந்து.
தொடர்ந்து வேகம் காட்டிய மைக்கேல் லம்ப் 27 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் அரைசதத்தை எட்ட, முதல் 10 ஓவர்களில் 96 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. காட்ரெல் வீசிய அடுத்த ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. 40 பந்துகளைச் சந்தித்த லம்ப் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். மைக்கேல் லம்ப்-அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்தது.
இதன்பிறகு அலெக்ஸ் 31 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் சேர்த்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் இயோன் மோர்கன் 18, ஜோஸ் பட்லர் 3, பென் ஸ்டோக்ஸ் 0, மொயீன் அலி 3 ரன்களில் ஆட்டமிழக்க, 40 ரன்கள் இடைவெளியில் 6 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, 19 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஜோர்டான் சிக்ஸர் மழை
டுவைன் பிராவோ வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரை எதிர்கொண்ட கிறிஸ் ஜோர்டான், ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 4 சிக்ஸர்களை பறக்கவிட, இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தன. ஜோர்டான் 9 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 27, ரவி போபாரா 9 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதிர்ச்சி தொடக்கம்
166 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித், டெர்ன்பாச் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே போல்டு ஆக, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாமுவேல்ஸ் 15, டுவைன் பிராவோ 16, ஆன்ட்ரே ரஸ்ஸல் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 11 ஓவர்களில் 67 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது மே.இ.தீவுகள்.
ஆனால் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த சிம்மன்ஸ்-ராம்தின் ஜோடி அதிரடியாக விளையாடி மேற்கிந்தியத் தீவுகளை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. ராம்தின் 21 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் சமி களம்புகுந்தார்.
கடைசி ஓவரில் மே.இ.தீவுகளின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3-வது பந்தில் சிம்மன்ஸ் ரன் அவுட்டானார். அவர் 55 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சமி 6 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 15 ரன்களுடனும், சுநீல் நரேன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜோர்டான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். கேப்டன் சமி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதல் இரு ஆட்டங்களிலும் வென்றிருந்த மே.இ.தீவுகள் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago