ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு பின்னடைவு கண்டுள்ளார். ஆம்லா 2-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என்று கைப்பற்றியது இதில் ஆம்லா 38 மற்றும் 119 என்று ரன்களை எடுத்திருந்தார். இதனால் கோலியை பின்னுக்குத் தள்ளி 2-ஆம் இடத்திற்கு முன்னேறினார்.
ஆனால், இலங்கைக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருப்பதால் அதில் சிறப்பாக விளையாடி கோலி மீண்டும் முன்னேற வாய்ப்பிருக்கிறது.
ஒருநாள் போட்டிகளின் அணிகள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஒருநாள் அணிகள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய அணி 3-வது இடத்திலும் இலங்கை, இங்கிலாந்து 4 மற்றும் 5-ஆம் இடங்களிலும் பாகிஸ்தான், நியூசிலாந்து, மே.இ.தீவுகள், வங்கதேசம், ஜிம்பாவே அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 6-வது இடத்தில் இருந்து வருகிறார். ஷிகர் தவன் 9-வது இடத்தில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago