பிரீமியர் பட்ஸல் உள்ளரங்க கால்பந்து லீக் தொடர்பான பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி பாடவிருக்கிறார்.
இந்தியாவில் பிரீமியர் பட்ஸல் லீக் என்ற உள்ளரங்க கால்பந்து தொடர் இந்திய இளம் கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்த பிரீமியர் பட்ஸல் கால்பந்து லீகின் விளம்பரத் தூதராக விராட் கோலி இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டார்.
பிரீமியர் பட்ஸல் லீக் சார்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துஜ் விராட் கோலி கூறும்போது, “கிரிக்கெட் ஆட்டக்களத்தை விட தற்போது எனக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. நான் மிகவும் பாராட்டும் ஒரு நபருக்கு அருகில் நான் தற்போது அமர்ந்திருக்கிறேன். என்னுடைய சிறுவயது கால நினைவுகள் பல ரஹ்மான் இசையமைத்த பல் டியூன்களோடு தொடர்புடையது. கிரிக்கெட்டுக்கு எப்படி தயார் படுத்திக் கொள்வது என்று தெரியும் ஆனால் தற்போது ரெக்கார்டிங் பற்றி எந்த ஒரு ‘க்ளூ’வும் என்னிடம் இல்லை” என்றார்.
இந்த பாடலின் தலைப்பு “நாம் ஹை ஃபட்சல்” என்பதாகும். “நாங்கள் இந்தப் பாடலுக்காக ஒரு வாரமாக பணியாற்றி வருகிறோம், இதில் விராட் பாடும் பகுதி ராப் பகுதியாகும். நான் அவருக்காக இதனை எளிதாக்கவுள்ளேன்.
விராட் கோலியுடன் இணைந்து பணியாற்றுவது ஆர்வமூட்டுவதாக உள்ளது. அவர் பேட்டில் எப்படி சிறந்து விளங்குகிறாரோ, அப்படியே ‘மெலடி’யிலும் சிறந்து விளங்குவார் என்று நம்புகிறேன்” என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago