மீண்டும் இனியெஸ்டாவின் மின்னாலட்டம்: இறுதி-16 அணிகள் சுற்றில் ஸ்பெயின்

By ஏஎஃப்பி

கடந்த ஐரோப்பிய கால்பந்து சாம்பியனான ஸ்பெயின் அணி குரூப் டி பிரிவு ஆட்டத்தில் துருக்கியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்பெயின் நட்சத்திரம் இனியெஸ்டா கன்னாபின்னா ஃபார்மில் உள்ளார். நேற்றும் அவர் ஏகப்பட்ட வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தார், இவரது லாவகமான நகர்வு பாஸின் துல்லியம் ஆகியவற்றினால் துருக்கி ஒன்றுமில்லாமல் ஆனது.

ஆனால் அல்வாரோ மொராட்டா 2 கோல்களை அடிக்க, நொலிட்டோ ஒரு கோல் அடிக்க ஸ்பெயின் 3-0 என்று வெற்றி பெற்றது.

இங்கிலாந்து-ரஷ்யா போட்டியைப் போன்றே இதுவும் ரசிகர்களின் ரகளை நிரம்பிய ஆட்டமாக அமைந்தது, துருக்கி ரசிகர்கள் மைதானத்துக்குள் பட்டாசைத் தூக்கி எறிந்து தங்கள் வெறுப்பைக் காட்டினர். இதனால் துருக்கி அணியே யுஏபாவின் தடைகளை எதிர்நோக்கியுள்ளது.

ஸ்பெயின் அணிக்கு குரேஷியாவுடன் இன்னொரு போட்டி உள்ளது. குரேஷியாவுடன் டிரா செய்தாலே இந்தப் பிரிவில் ஸ்பெயின் முதலிடத்தைத் தக்க வைக்கும்.

துருக்கி அணி செக்.குடியரசை வீழ்த்தி விட்டு மற்ற முடிவுகளை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும்.

குரேஷிய அணிக்கு எதிராக துருக்கி அன்று சரியாக ஆடாததால் துருக்கி பயிற்சியாளர் வீரர்களை கடுமையாக எச்சரித்தார். அதற்கு இந்தப் போட்டியில் சிறிது நேரத்துக்கு பலன் இருந்தது.

துருக்கி வீரர் ஹகன் கல்ஹனோக்ளூ சில எதிர்த்தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு துருக்கி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டினார். அதுவும் 25-வது நிமிடத்தில் இவர் அடித்த ஃப்ரீ கிக் ஷாட் ஸ்பெயின் கோல் கீப்பர் டேவிட் டி ஜியாவுக்கு மேல் கிராஸ்பாரைத் தாக்கியபோது துருக்கி ரசிகர்கள் கால்கள் தரையில் பாவவில்லை.

அரைமணிக்குப் பிறகு ஸ்பெயின் தனது ஆக்ரோஷமான அணுகுமுறைக்கு திரும்பியது. துருக்கி அணியினர் பந்தின் ஸ்பரிசம் தங்கள் கால்களில் பட ஏங்குமளவுக்கு ஸ்பெயின் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். அதுவும் நடுக்களத்தில் ஆட்ட நாயகன் இனியெஸ்டா சில பல அபாரமான, அபூர்வ மூவ்களில் வாய்ப்புக்குப் பிறகு வாய்ப்புகளை உருவாக்கித் தந்து கொண்டே இருந்தார்.

34-வது நிமிடத்தில் இத்தகைய நகர்வு ஒன்றில் நொலிட்டோவிடம் பந்து வர அவர் துருக்கி கோல் அருகே மொராட்டா தனியாக மார்க் செய்யப்படாமல் இருக்கும் தருணத்தை பயன்படுத்தி ஒரு அருமையான பாஸை செய்ய மொராட்டா தலையால் முட்டி ஸ்பெயினுக்கு முன்னிலை அளித்தார்.

சரியாக 3 நிமிடங்கள் கழித்து செஸ்க் பேபர்காஸ் பந்தை லேசாக பாக்ஸிற்குள் பிளிக் செய்ய அதனை மெஹ்மட் டோபால் தலையால் தள்ளி விட நொலிட்டோ அருமையாக அதனை கோலாக மாற்றினார்.

இடைவேளைக்குப் பிறகு இனியெஸ்டாவின் அருமையான நகர்வுகளால் நிறைய வாய்ப்புகள் ஏற்பட்டன, ஆனால் துருக்கி சிலபல தடுப்புகளை மேற்கொண்டது.

48-வது நிமிடத்தில் மீண்டும் இனியெஸ்டாவின் அபாரமான ஆட்டத்தினால் துருக்கி தடுப்பாட்ட வீரரைத் தாண்டி ஜோர்டி ஆல்பாவிடம் பந்து வர, அவர் அதனை மொராட்டாவிடம் அடிக்க இதனை 3-வது கோலாக மாற்றினார் மொராட்டா.

துருக்கி ஏமாற்றமடைந்தது, முதல் கிராஸ்பார் ஷாட் நீங்கலாக துருக்கி ஒரு ஷாட்டை கூட கோல் நோக்கி சரியாக அடிக்கவில்லை. துருக்கி நட்சத்திர வீரர் அர்தா டியூரனை ரசிகர்கள் கேலி செய்யத் தொடங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்