கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஒரு நாள் போட்டிகளில் 300 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையை படைத்தார்.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவர் இன்று ரோஸ் டெய்லரின் கேட்சை பிடித்து இந்தச் சாதனையை புரிந்துள்ளார். இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் முகமது ஷமி பந்துவீச்சில், ஆட்டத்தின் 37-வது ஓவரில், டெய்லர் அடித்த பந்தை கேட்ச் பிடித்தார் தோனி.
இந்தத் தொடருக்கு முன்பாக தோனி விக்கெட் கீப்பராக ஆட்டமிழக்கச் செய்த வீரர்களின் எண்ணிக்கை 299 (220 கேட்சுகளும், 70 ஸ்டம்பிங்குகளும்).
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 பேரை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், நான்காவது சாதனையாளராகத் திகழ்கிறார் தோனி.
ஆஸ்திரேலியவின் ஆடம் கில்கிறிஸ்ட் (472), இலங்கையின் குமார் சங்ககாரா (443) மற்றும் தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (425) ஆகியோரே அந்த மூன்று சாதனை விக்கெட் கீப்பர்கள்.
இதேபோல், இந்திய கேப்டன்களில் அதிக கேட்ச் பிடித்தோர் பட்டியலில், முகமது அசாரூதினைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார், கேப்டன் தோனி.
இந்த போட்டியில் இரண்டு கேட்ச் பிடித்ததன் மூலம் தற்போது அவர் 301 கேட்ச்களை பிடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச அளவில் 4 வது இடத்தையும் அவர் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆதம் கில்கிறிஸ்ட் 472 கேட்ச் பிடித்து முதல் இடத்தில் உள்ளார்.
இலங்கையின் குமார் சங்ககாரா 443 கேட்ச்கள் பிடித்து இரண்டாம் இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்க் பௌச்சர் 425 கேட்ச்கள் பிடித்து 3 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago