உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை: மிஸ்பா-உல்-ஹக் அறிவிப்பு

By ஏஎஃப்பி

உலகக் கோப்பை போட்டிக்கு பாகிஸ்தான் கேப்டனாக இருக்க விரும்பவில்லை என்று பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கூறியுள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது அணியில் இருந்து மிஸ்பா விலகினார். அப்ரிடி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார்.

உலகக் கோப்பை போட்டி வரை பாகிஸ்தான் கேப்டனாக மிஸ்பா-உல்-ஹக் இருப்பார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தோல்விக்குப் பிறகு மிஸ்பா இது தொடர்பாக கூறியது:

சமீபகாலமாக என்னால் அதிக ரன் எடுக்க முடியவில்லை. சிறப்பான ஆட்டத்தை விளையாட முடியவில்லை என்று எனக்கே நன்றாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும், நாட்டையும் மனதில் வைத்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. அணியை கடினமான சூழ்நிலைக்கு தள்ள விரும்பவில்லை. எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுக்க வேண்டும். அணியில் கேப்டனாக தொடர எனக்கு விருப்பமில்லை என்றார்.

மிஸ்பாவின் இந்த அறிவிப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சஹாரியார் கான் கூறியது: உலகக் கோப்பை போட்டி வரை மிஸ்பா-உல்-ஹக் கேப்டனாக இருப்பார் என வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்கு பிறகு அவர் வேறு முடிவு எடுப்பது அவரது கையில் உள்ளது. அவர் சரியாக விளையாடவில்லை என்று நாங்கள் எப்போதும் குறை கூறியது இல்லை.

மிஸ்பா அணிக்கு தலைமை வகித்தால் அவருக்கு அனைத்து வகையிலும் உதவிகரமாக வாரியம் இருக்கும் அதே நேரத்தில். அவரை எந்த வகையிலும் நாங்கள் கட்டா யப்படுத்தவில்லை. ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடாமல் இருந்தது மிஸ்பாவின் முடிவுதான் என்றார் கான்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்