அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு ஜோகோவிச், கெர்பர் முன்னேற்றம்; சானியா ஜோடி வெளியேறியது

By ஏஎஃப்பி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரை இறுதிக்கு ஜோகோவிச், மோன்பில்ஸ், ஏஞ்சலிக் கெர்பர், கரோலினி வோஸ்னியாக்கி ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான இந்த தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பிரான்சின் சோங்காவுடன் மோதினார்.

10-வது முறை

இதில் ஜோகோவிச் 6-3, 6-2 என முன்னிலையில் இருந்த போது சோங்கா காயமடைந்தார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகினார். இதனால் ஜோகோவிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்க ஓபன் அரை இறுதிக்கு ஜோகோவிச் முன்னேறுவது இது 10-வது முறையாகும்.

இந்த தொடரில் ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடும் வீரர் காயம் அடைவது இது 3-வது முறை. ஏற்கெனவே 2-வது சுற்றில் செக் குடியரசு வீரர் ஜிரி வெஸ்லி, 3-வது சுற்றில் ரஷ்யாவின் மிகைல் யோஷ்னி ஆகியோரும் காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே விலகியி ருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோன்பில்ஸ்

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் 10-ம் நிலை வீரரான பிரான்சின் மோன்பில்ஸ் சகநாட்டை சேர்ந்தவரும் 4-வது சுற்றில் ரபேல் நடாலை வீழ்த்தியவருமான லூகாஸ் பூய்லேவை சந்தித்தார். இதில் மோன்பில்ஸ் 6-4, 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரை இறுதியில் கால் பதித்தார். இந்த சுற்றில் மோன்பில்ஸ், ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

கெர்பர் வெற்றி

மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் 2-ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 7-5, 6-0 என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீராங்கனையான ராபர்ட்டா வின்சியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான கெர்பர் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறியிருந்தார்.

இந்த முறை அவர் அரை இறுதியில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை எதிர்கொள்கிறார். தற்போது தரவரிசையில் 74-வது இடத்தில் உள்ள வோஸ்னியாக்கி, கால் இறுதி சுற்றில் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் 48-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை எளிதாக வீழ்த்தினார்.

முதல்முறையாக கால் இறுதியில் விளையாடிய செவஸ்டோவாவினால், வோஸ்னியாக்கியின் தாக்குதல் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் போனது. ஆரம்பத்தில் இருந்தே பின்தங்க தொடங்கிய செவஸ்டோவா வுக்கு எந்த ஒரு கட்டத்திலும் வாய்ப்பு கொடுக்கமால் அசத்தல் வெற்றியை பெற்றார் வோஸ்னியாக்கி.

2009 மற்றும் 2014ம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டி வரை வோஸ்னியாக்கி முன்னேறியிருந்தார். மேலும் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதி வரை சென்றுள் ளார்.

கெர்பரும், வோஸ்னியாக்கியும் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் கெர்பர் 7 ஆட்டங்களிலும், வோஸ்னியாக்கி 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா ஜோடி தோல்விய டைந்தது.

சானியா ஜோடி 6-7, 1-6 என்ற நேர் செட்களில் பிரான்சின் கரோலின் கார்சியா, கிறிஸ்டினா ஜோடியிடம் வீழ்ந்தது. ஏற்கெனவே ஒற்றையர் பிரிவில் ஷாகேத் மைனேனி மற்றும் லியாண்டர் பயஸ், போபண்ணா ஜோடிகள் தோல்வியைத் தழுவிய நிலை யில், அமெரிக்க ஓபனில் ஒரே இந்திய ராக நீடித்த சானியா மிர்சாவும் தற்போது தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறி உள்ளார்.







VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்