ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், முதல் நிலை வீராங்கனையான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. ஜோகோவிச் ஸ்லோவாகியாவின் லூகாஸ் லாக்ஸ்கோவை 6-3, 7-6(7-2), 6-1 என்ற செட் கணக்கில் வென்றார்.
செரீனா ஆஸ்திரேலியாவின் ஆஸ்லிக் பார்ட்டியை தனது முதல் சுற்றில் எதிர்கொண்டார். இதில் 6-2,6-1 என்ற நேர் செட்களில் செரீனா எளிதாக வெற்றி பெற்றார்.
சென்னை ஓபன் டென்னிஸ் சாம்பியனான ஸ்விட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா முதல் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தானைச் சேர்ந்த ஆண்ட்ரே கொலுபை எதிர்கொண்டார். 6-4, 4-1 என்ற கணக்கில் வாவ்ரிங்கா முன்னிலையில் இருந்தபோது ஆண்ட்ரே காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து வாவ்ரிங்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் இரண்டா வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
வீனஸ் விட்டோவா தோல்வி
மகளிர் பிரிவில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள செக் குடியரசின் பெட்ரா விட்டோவா, தரவரிசையில் 88-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் லுகசிகாவிடம் 2-6, 6-1, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ரஷியாவைச் சேர்ந்த கேத்ரீனா மகரோவா 2-6,6-4,6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார். இதன் மூலம் முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து வீனஸ் வெளியேறினார். செர்பியாவின் அனா இவானோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சீனாவின் லீ நா குரோஷி யாவின் அனாசோஜாவை 6-2,6-0 என்ற செட் கணக்கில் மிக எளிதாக வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரும் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலியின் சாரா எர்ரானிக்கு ஆஸ்திரேலிய ஓபன் முதல் சுற்று அதிர்ச்சி அளிப்ப தாகவே அமைந்தது. ஜெர்மனி வீராங்கனை ஜூலியா ஜார்ஜஸ் எர்ரானியைத் தோற்கடித்து வெளியேற்றினார்.
43-ஐ வென்ற 16
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல்நாளே சுவாரசியமாக அமைந்தது. 16 வயது வீராங்கனை ஒருவர் 43 வயது வீராங்கனையைத் தோற்கடித்தார்.
ஜப்பானைச் சேர்ந்த 43 வயது வீராங்கனை கிமிகோ டேட்-குரும் இவர் தனது முதல்சுற்று ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த 16 வயது வீராங்கனை பிளின்டா பென்ஸிக்கை எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் 27. மேலும் பிளின்டாவின் தாயைவிட கிமிகோ மூத்தவர் என்பது இதில் மிகவும் சுவாரசியமான விஷயம். இந்த ஆட்டத்தில் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் பிளின்டா தோற்கடித்தார்.
இந்த வெற்றி குறித்து பிளின்டா கூறியது: எதிர்த்து விளையாடுபவர் வயதில் என்னைவிட அதிகம் மூத்தவர் என்பதை கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் அவருடனான மோதல் மிகவும் கடினமாகவே இருந்தது. முதலில் தடுமாற்றத்துடன் விளையாடினாலும், பின்னர் முழுபலத்தை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற முடிந்தது என்றார். கடந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜூனியர் மகளிர் பிரிவில் பிளின்டா வெற்றி பெற்றுள்ளார். புதிய மார்டினா ஹிங்கிஸ் என்றும் வர்ணிக்கப்படுகிறார்.சர்வதேச தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சீனாவின் லீனாவை பிளின்டா தனது 2-வது சுற்றில் எதிர்கொள்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago