சென்னை லீக் கால்பந்து: சுங்கத்துறையை வீழ்த்தியது ஏரோஸ்

By ஏ.வி.பெருமாள்

சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஏரோஸ் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை சுங்கத்துறையைத் தோற்கடித்தது. இதன்மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்தது ஏரோஸ்.

சென்னை நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நைஜீரிய வீரர் மோர்கன் ஜஸ்டிஸின் வருகை, ஏரோஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே அபாரமாக ஆடிய ஏரோஸ் 10-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது. கோல் கம்பத்தின் இடது புறத்தில் இருந்தபோது பந்தை பெற்ற மோர்கன், சுங்கத்துறை தடுப்பாட்டக்காரர்களை மிக லாவகமாக பின்னுக்குத் தள்ளிவிட்டு, கோல் கம்பத்தை நோக்கி ‘கிராஸ்’ செய்ய, அதை சரியாகப் பயன்படுத்தி மசூர் ஷெரீப் கோலடித்தார்.

அடுத்தடுத்த நிமிடங்களில் கிடைத்த இரு கோல் வாய்ப்புகளை ஏரோஸ் அணி கோட்டைவிட, 15-வது நிமிடத்தில் ஏரோஸுக்கு பதிலடி கொடுத்தது சுங்கத் துறை. ப்ரீ ஹிக் வாய்ப்பில் 20 யார்ட் தூரத்தில் இருந்த இடதுபுற தடுப்பாட்டக்காரர் ஹரிஹரன் அடித்த பந்து, கோல் கீப்பர் அமல்ராஜை நோக்கி சென்றது. ஆனால் அதை அவர் கோட்டைவிட சுங்கத்துறைக்கு கோல் கிடைத்தது.

இதன்பிறகு ஏரோஸ் அணி அபாரமாக ஆடியபோதும் அவ்வப்போது கிடைத்த கோல் வாய்ப்புகளை கோட்டை விட்டுக் கொண்டேயிருந்தது. வைசா கனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பில், அவர் கோல் கம்பத்துக்கு மேல் பந்தை தூக்கியடித்தார். அந்த அணி அடித்த சில நல்ல ஷாட்களையும் சுங்கத்துறை கோல் கீப்பர் அருண் பிரதீப் அற்புதமாக முறியடித்தார்.

35-வது நிமிடத்தில் ஏரோஸ் ஸ்டிரைக்கர் மோர்கன் ‘கிராஸ்’ செய்த பந்தை, சுங்கத்துறை வலதுபுற தடுப்பாட்டக்காரர் தலையால் முட்டி வெளியில் திருப்ப முயற்சித்தார். ஆனால் அவர் தலையில் பட்ட பந்து கோல் வலைக்குள் செல்லவே, முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் ஏரோஸ் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஏரோஸ் அணிக்கு சில கோல் வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் அந்த அணி கோட்டைவிட்டது. அதேநேரத்தில் சுங்கத்துறையும் கோலடிக்கவில்லை. இதனால் 2-வது பாதி ஆட்டம் கோலின்றி முடிய, ஏரோஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. ஏரோஸின் பல கோல் வாய்ப்புகளை முறியடித்த சுங்கத்துறை கோல் கீப்பர் அருண் பிரதீப் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நேதாஜி அணி வெற்றி

முன்னதாக நடைபெற்ற முதல் டிவிசன் லீக் போட்டியில் நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வருமான வரித்துறை அணியை வீழ்த்தியது. அந்த அணி தரப்பில் பாஸ்கர், அசோக் குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்