சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால் 8-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். முன்னதாக 7-வது இடத்தில் இருந்த அவர் ஓர் இடத்தை இழந்துள்ளார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான சாய்னா நெவால், கடந்த சீசன் முழுவதும் தொடர் தோல்விகளை சந்தித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் போட்டியில் காலிறுதியோடு வெளியேறிய சாய்னா, இப்போது தரவரிசையில் ஓர் இடத்தை இழந்து 8-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது ஸ்விஸ் ஓபனில் விளையாடி வரும் சாய்னா, அதில் பட்டம் வெல்லும் பட்சத்தில் தரவரிசையில் மீண்டும் முன்னேற்றம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிந்துவின் தரவரிசையில் எவ்வித மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளார். ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் காஷ்யப் 14-வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். அஜய் ஜெயராம் ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 24-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago