ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர், ஆன்டி முர்ரே, மரியா ஷரபோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (4-வது சுற்று) முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் ஸ்பெயினின் நடால் 6-1, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கேல் மான்ஃபில்ஸைத் தோற்கடித்தார். நடால் அடுத்த சுற்றில் தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள நிஷிகோரியை சந்திக்கிறார். நிஷிகோரி, அமெரிக்க வீரர் டொனால்ட் யங்கை தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே 7-6 (2), 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸைத் தோற்கடித்தார். முர்ரே அடுத்த சுற்றில் பிரான்ஸின் ஸ்டீபன் ராபெர்ட்டை சந்திக்கிறார்.
17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-2, 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ரஷியாவின் டெய்முர்ஸ் கேபாஷிவ்லியைத் தோற்கடித்தார். தொடர்ந்து 13-வது ஆண்டாக ஆஸ்திரேலிய ஓபனில் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள ஃபெடரர் அடுத்ததாக பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவை சந்திக்கிறார். சோங்கா தனது 3-வது சுற்றில் சகநாட்டவரான ஜில்ஸ் சைமனைத் தோற்கடித்தார். சர்வதேச தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 3-6, 6-4, 7-6 (10) என்ற செட் கணக்கில் தரவரிசையில் 11-வது இடத்தில் கனடாவின் மிலோஸ் ராவ்னிச்சிற்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
அசரென்கா வெற்றி
மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியனான பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் வோன் மெஸ்பர்கரைத் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அடுத்ததாக அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸை சந்திக்கிறார் அசரென்கா.
3-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா தனது 3-வது சுற்றில் 6-1, 7-6 (6) என்ற நேர் செட்களில் பிரான்ஸின் அலைஸ் கார்னெட்டைத் தோற்கடித்தார். அடுத்த சுற்றில் ஸ்லோவேகியாவின் டொமினிகாவை சந்திக்கிறார் ஷரபோவா.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago