சிங்கப்பூர் கிராண்ட்ப்ரீ - வெட்டல் ஹாட்ரிக் வெற்றி

By செய்திப்பிரிவு

சிங்கப்பூர் கிராண்ட்ப்ரீ பார்முலா 1 கார்பந்தயத்தில் நடப்புச் சாம்பியனும், ரெட்புல் டிரைவருமான செபாஸ்டியன் வெட்டல் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ளார் வெட்டல்.

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட வெட்டல், 1 மணி நேரம், 59 நிமிடம், 13.132 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார்.

மொத்தம் 61 “ரவுண்டு”களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதல் “கார்னரில்” செபாஸ்டியன் வெட்டல் காரும், 2-வது வரிசையில் இருந்து புறப்பட்ட மெர்ஸிடஸ் டிரைவர் நிகோ ரோஸ்பெர்க் காரும் மோதியது. இதையடுத்து பாதுகாப்பு வாகனத்தின் (சேஃப்டி கார்) உதவியுடன் விபத்திலிருந்து மீண்ட செபாஸ்டியன் வெட்டல், தொடர்ந்து வேகமாக காரைச் செலுத்தி வெற்றி கண்டார்.

இதன்மூலம் இந்த சீசனில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி கண்ட வெட்டல், சிங்கப்பூர் கிராண்ட்ப்ரீ போட்டியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். சிங்கப்பூர் கிராண்ட்ப்ரீ போட்டியில் வெற்றி கண்ட வெட்டல், இந்த சீசனில் 7-வது வெற்றியைப் பெற்றதோடு, தனது கார் பந்தய வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக 33-வது வெற்றியை ருசித்துள்ளார்.

வெட்டலுக்கு அடுத்தபடியாக பெராரி டிரைவர் பெர்னாண்டோ அலோன்சா 2-வது இடத்தையும், லோட்டஸ் டிரைவர் கிமி ராய்க்கோனென் 3-வது இடத்தையும் பிடித்தனர். ராய்க்கோனென் கடுமையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதை பொருட்படுத்தாது சிறப்பாக செயல்பட்டு 3-வது இடத்தைப் பிடித்தார்.

மெர்ஸிடஸ் டிரைவர்கள் நிகோ ரோஸ்பெர்க் 4-வது இடத்தையும், லீவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்தையும் பிடித்தனர். லீவிஸ் ஹாமில்டன், விதிமுறைகளை மீறி பெராரி டிரைவர் பெலிப் மாஸாவை முந்தியதால், தனது அணியால் ரேடியோ மூலமாக கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

19 சுற்றுகளைக் கொண்ட இந்த சீசனுக்கான பார்முலா 1 போட்டியில் இதுவரை 13 சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், செபாஸ்டியன் வெட்டல் 247 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பெராரி டிரைவர் பெர்னாண்டோ அலோன்சா 187 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லீவிஸ் ஹாமில்டன் 151 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அலோன்சாவைவிட வெட்டல் 60 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். இதனால் இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை அவர் நெருங்கியுள்ளார்.

ஏற்கெனவே தொடர்ச்சியாக மூன்று முறை பட்டம் வென்றுள்ள 26 வயதான வெட்டல், இந்த முறை பட்டம் வெல்லும் பட்சத்தில், பார்முலா 1 போட்டியில் தொடர்ந்து 4 முறை பட்டம் வென்ற 3-வது வீரர் என்ற பெருமையையும், முதல் இளம் வீரர் என்ற பெருமையையும் பெறுவார்.

மைக்கேல் ஷூமாக்கர், ஜுவான் மானுவேல் பங்கியோ ஆகியோர் தொடர்ந்து 4 முறை பட்டம் வென்ற மற்ற இருவர் ஆவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்