ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா, பாகிஸ்தானின் குரேஷி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவின் லியாண்டர் பயஸ் – செக் குடியரசின் ரடேக் ஸ்டெபானிக் ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. போபண்ணா – குரேஷி ஜோடி, பிலிப்பின்ஸின் ட்ராட் ஹேயே, பிரிட்டனின் டொமினிக் இங்லாக் ஜோடியை காலியுறுதியில் எதிர்கொண்டது. இதில் 6-7(3), 7-6(5), 10-3 என்ற செட் கணக்கில் குரேஷி ஜோடி வெற்றி பெற்றது.
அரையிறுதியில் லூகார் ரசூல், ஜோவா சௌசா ஜோடியை எதிர்கொள்ள இருக்கிறது. ரசூர்-சௌசா ஜோடி தங்கள் காலிறுதியில் அமெரிக்காவின் மைக் – பாப் பிரையர் ஜோடியை அதிரடியாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. எனவே போபண்ணா ஜோடிக்கு அரையிறுதில் இவர்கள் கடும் சவாலாக இருப்பார்கள்.
இந்தியாவின் முன்னணி வீரரான பயஸுக்கு இந்த ஆண்டின் தொடக்கமே தோல்வியாக அமைந்துவிட்டது. சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி பயஸின் ஜோடி பாபியோவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பயஸ் களமிறங்கி விளையாட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஸ்டெபானிக்குடன் இணைந்து பயஸ் களமிறங்கினார். முதல் சுற்றில் பிரான்ஸின் ஜூலியன் பெனிட்டோ, ரோஜர் வேஸலின் ஜோடியை பயஸ் ஜோடி எதிர்கொண்டது. 65 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4-6, 4-6 என்ற நேர் செட்களில் பயஸ் ஜோடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago