இது உள்நாட்டு தொடர்... எதற்காக பவுன்ஸ் பிட்ச்? : பாக். கிரிக்கெட் வாரியம் அதிருப்தி

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக துபாயில் ‘பவுன்ஸ்’பிட்ச் போடப்பட்டுள்ளது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளிப்படையாக தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.

துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தின் பிட்ச் தயாரிப்பாளர் டோனி ஹெமிங்ஸ், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பந்துகள் எகிறும் ஆடுகளத்தை தயாரித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இது பாகிஸ்தானில் விளையாடப்படும் உள்நாட்டுத் தொடர் போன்றதுதான். எனவே ஸ்பின்னர்களுக்குச் சாதகமான ஆட்டக்களங்களே தங்களுக்கு வேண்டும் என்று ஹெமிங்ஸிற்கு தெரியப்படுத்தியதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விளையாடும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்காக துபாய் மைதானத்திற்கு கட்டணம் கட்டி வரும் பாகிஸ்தான் தற்போது ஆஸ்திரேலியாவை ஸ்பின்னில் வீழ்த்த கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் பவுன்ஸ் பிட்ச் என்று ஹெமிங்ஸ் கூறியிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் உடற்தகுதி பெற்று அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பவுன்ஸ் பிட்ச் தயாரித்தால் பாகிஸ்தான் பயப்படுவதிலும் நியாயம் உள்ளதே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

விளையாட்டு

49 mins ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்