சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சோம்தேவ், மீண்டும் முதல் 100 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
ஓர் ஆண்டு 9 மாதங்களுக்குப் பிறகு தரவரிசையில் மீண்டும் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ள சோம்தேவ், தற்போது 98-வது இடத்தைப் பிடித்துள்ளார். 2011-ல் தனது அதிகபட்ச தரவரிசையான 62-வது இடத்தைப் பிடித்த சோம்தேவ், அதன்பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக தரவரிசையில் கடுமையான சரிவைச் சந்தித்தார்.
இந்த நிலையில் காயத்திலிருந்து மீண்ட சோம்தேவ், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி மற்றும் வாஷிங்டன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்று வரை முன்னேறினார். இதுதவிர தற்போது மலேசிய ஓபன் டென்னிஸ் போட்டியின் பிரதான சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ள சோம்தேவ், தரவரிசையில் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு மீண்டும் முதல் 100 இடங்களுக்குள் வந்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தைவான் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளிலும் இறுதிச்சுற்று வரை முன்னேறிய யூகி பாம்ப்ரி, ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 190 இடங்கள் முன்னேறி, தற்போது 287-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு தரவரிசையைப் பொறுத்தவரையில் லியாண்டர் பயஸ் 5-வது இடத்தையும், ரோஹன் போபண்ணா 7-வது இடத்தையும், மகேஷ் பூபதி 10-வது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தியாவின் திவிஜ் சரண் ஓர் இடம் முன்னேறி 69-வது இடத்திலும், பூரவ் ராஜா 89-வது இடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago