காயம் காரணமாக 2017 ஐபில் டி20 கிரிக்கெட் தொடர் முழுவதும் அஸ்வின் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றொரு வீரர் முரளி விஜய் ஆடுவதும் சந்தேகமாகியுள்ளது.
ஏற்கெனவே விராட் கோலி, ராகுல் ஆகியோரினால் ராயல் சாலஞ்சர்ஸ் அணி பின்னடைவு கண்டுள்ளது, தற்போது அஸ்வின் காயத்தினால் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அடிவயிறு பகுதியில் வலி காரணமாக அவர் 6 முதல் 8 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் தொடருக்குள் அவர் முழு உடல் தகுதி பெற்று விடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர் முரளி விஜய்யும் மணிக்கட்டு மற்றும் தோள்பட்டை காயங்களினால் தொடர் முழுதையும் இழப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“விஜய் வலது மணிக்கட்டில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது, அதனால், 2017 ஐபிஎல் தொடரில் இவர் பங்கேற்காமல் போகலாம்” என்று பிசிசிஐ அறிவிப்பொன்று தெரிவிக்கிறது.
அதே போல் ஜடேஜா, உமேஷ் யாதவ் ஆகியோரும் தங்கள் காயத்திலிருந்து மீண்டு வர 2 வாரங்கள் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago