1964 டோக்கியோ ஒலிம்பிக்: அபேபே பிக்கிலா: மாரத்தானில் மீண்டும் அசத்திய பிக்கிலா

By பெ.மாரிமுத்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 18-வது ஒலிம்பிக் போட்டி 1964-ம் ஆண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை நடைபெற்றது. இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியை நடத்திய முதல் ஆசிய நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றது. இந்தப் போட்டியில் 93 நாடுகள் கலந்து கொண்டன. 4,473 வீரர்கள், 678 வீராங்கனைகள் என மொத்தம் 5,151 பேர் பங்கேற்றனர். 19 விளையாட்டுகளில் 163 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. அமெரிக்கா 36 தங்கம், 26 வெள்ளி, 28 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடித்தது. 30 தங்கம், 31 வெள்ளி, 35 வெண்கலம் என 96 பதக்கங்களுடன் ரஷ்யா 2-வது இடத்தைப் பிடித்தது. போட்டியை நடத்திய ஜப்பான் 16 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலத்துடன் மொத்தம் 29 பதக்கங்களுடன் 3-வது இடம் கைப்பற்றியது.

சஹாய்

யோஷினோரி சஹாய் என்ற 19 வயது மாணவர், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். 1945-ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டை வீசி பேரழிவை ஏற்படுத்தியபோது அங்கு சஹாய் பிறந்தார். அதன் காரணமாகவே அமைதியை வலியுறுத்தும் வகையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு சஹாய்க்கு வழங்கப்பட்டது.

ஹாக்கியில் இந்தியா சாம்பியன்

இந்தியாவில் 53 பேர் பங்கேற்றனர். ஹாக்கியில் மட்டும் இந்திய அணி தங்கம் வென்றது. கடந்த ஒலிம்பிக்கில் பாகிஸ் தானிடம் தங்கப் பதக்கத்தை இழந்திருந்த இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து முதலிடம் பிடித்தது.

மாரத்தான் சாம்பியன்

முந்தைய ஒலிம்பிக்கில் ஷூ இன்றி வெறுங்காலுடன் ஓடி மாரத்தானில் மகுடம் சூடிய எத்தியோப்பியா வீரர் அபேபே பிக்கிலா, இந்த ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். இதன்மூலம் மாரத்தானில் தொடர்ந்து இரண்டு முறை தங்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்