வரும் ஐபிஎல் தொடருக்கு, இந்தியாவின் நட்சத்திர வீரர் கோலி, மேற்கிந்திய தீவுகளின் அதிரடி பேட்ஸ்மேன் கெயில் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் டி வில்லியர்ஸ் ஆகியோரை தக்க வைத்துக் கொள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முடிவு செய்துள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, தலைமை பயிற்சியாளாரக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் தான், கொல்கத்தா அணி தனது நட்சத்திர வீரர்களான காம்பிர் மற்றும் சுனில் நரைன் ஆகியோரை தக்கவைத்துக் கொள்ளப் போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், பெங்களூரு அணி, தனது மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களையும் தக்கவைத்துக்கொள்வது எதிர்பார்த்த அறிவிப்பே.
பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் தொடரிலிருந்து, விராட் கோலி அந்த அணிக்கு ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியிலிருந்து கெயிலும், டெல்லி அணியிலிருந்து டி வில்லியர்ஸும் 2011-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.
வெட்டோரியோடு சேர்த்து, தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட், பவுலிங் பயிற்சியாளராகவும், ஆஸ்திரேலியாவின் ட்ரெண்ட் வுட்ஹில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு அணியுடன் எனக்கு நெருக்கமான இருந்து வருகிறது. இந்த அணிக்காக வேலை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலி அணிக்குத் தேவையான விதத்தில் தனது முழு திறமையை வெளிபடுத்தி வருகிறார். நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, வரும் ஏலத்தில், அணிக்காக எத்தகைய வீரர்களைப் எடுக்க வேண்டும் என்பது பற்றிய திட்டத்தை வளர்க்க வேண்டும். இப்போதைக்கு இதுதான் எனது பிரதான வேலை" என டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான வெட்டோரி, 2011-ஆம் வருடம் டெல்லி அணியிலிருந்து பெங்களூரு அணிக்கு கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வருடமே அணியை ஐபிஎல்-இன் இறுதி சுற்றுவரை பெங்களூரு அணி சென்றது.
சென்ற ஐபிஎல் தொடரில் பூனே வாரியர்ஸ் அனிக்கு பயிற்சியாளராக இருந்த ஆலன் டொனால்ட், இந்த முறை ஐபிஎல் கோப்பையை தட்டிச் செல்வதற்கான திறமை பெங்களூரு அணிக்கு உள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் கூறுகையில், "நான், பெங்களூரு அணியை கூர்ந்து கவனித்து வருகிறேன். தொடரை வெல்வதற்கான திறமை அவர்களிடம் உள்ளதாக நினைக்கிறேன். எனது அனுபவம், அணியை வெற்றிக்கு வழிநடத்திச் செல்ல உதவும் என நம்புகிறேன்" என்றார்
அணியின் உரிமையாளர் மல்லயா இதைப் பற்றி பேசும்போது, "இந்த மூன்று வலிமையான வீரர்களும் அணிக்கு பல விதங்களில் பெருமை சேர்த்துள்ளனர். பல ஆட்டங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். அவர்களை தக்க வைத்திருப்பது, ஒரு பலமான அணியை எங்களால் உருவாக்க முடியும் என்பதையே காட்டுகிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago