தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலியா. கேப் டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 245 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று தொடரைக் கைப்பற்றியது. 2-வது டெஸ்ட் போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 494 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய தென்னாப் பிரிக்கா 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.511 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா ஆட்டத்தின் கடைசி நாளில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா 245 ரன்கள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.
இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவரே தொடர் நாயகன் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.
ஸ்மித் ஓய்வு
இந்த டெஸ்ட் போட்டியுடன் தென்னாப்பிரிக்க கேப்டன் ஸ்மித் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் முறையே 5 மற்றும் 3 ரன்களே எடுத்தார்.இதுவரை 117 டெஸ்ட் போட்டி களில் பங்கேற்றுள்ள ஸ்மித் 9265 ரன்களை எடுத்துள்ளார். இதில் 27 சதங்களும், 38 அரைசதங்களும் அடங்கும். மொத்தம் 9265 ரன்கள் எடுத்துள்ளார் சராசரி 48.25. 197 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 6989 ரன்கள் எடுத்துள்ளார். இதில் பத்து சதங்களும் 47 அரைசதங்களும் அடங்கும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago