50 ஆண்டுகளின் மிகச் சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியல்: லஷ்மணின் 281 ரன்களுக்கு முதலிடம்

By இரா.முத்துக்குமார்

கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லஷ்மண் எடுத்த 281 ரன்கள் முதலிடம் வகித்துள்ளது.

2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில் ஃபாலோ ஆன் ஆடிய இந்திய அணிக்காக 281 ரன்கள் எடுத்த லஷ்மணின் இந்த இன்னிங்ஸ் கடந்த 50 ஆண்டுகளின் மிகச்சிறந்த இன்னிங்ஸாக ஈ.எஸ்.பி.என் கிரிக் இன்போவின் கிரிக்கெட் மன்த்லி இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.

கிரிக்கெட் மன்த்லி இதழுக்காக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் எழுத்தாளர்கள், ஒளிபரப்பாளர்கள், கிரிக்கெட் வரலாற்றாய்வாளர்கள், புள்ளி விவர நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய குழு கடந்த 50 ஆண்டுகளில் சிறந்த டெஸ்ட் பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையை வெளிப்படுத்திய 50 சந்தர்ப்பங்களை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. வெறும் பட்டியலாக இல்லாமல் அந்த பந்து வீச்சு, பேட்டிங் ஆகியவை இடம்பெற்ற சூழ்நிலைகள், கடினப்பாடுகள் அகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது.

இதில் 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தாவில், இந்தியா பாலோ ஆன் ஆடிய போது வி.வி.எஸ்.லஷ்மண் 281 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்ததோடு இந்தியா அபார வெற்றியையும் ஈட்டியது. மேலும் தொடர் வெற்றிகளை ஸ்டீவ் வாஹ் தலைமையில் ஆஸ்திரேலியா குவித்து வந்த தருணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி தழுவிய இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாலோ ஆனுக்கு பணிக்கப்பட்டது. அதில் லஷ்மணும் திராவிடும் இணைந்து நாள் முழுதும் ஆடினர். லஷ்மண் 281 ரன்களை எடுத்தார். திராவிட் 180 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 376 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க போட்டியில் சச்சின் டெண்டுல்கர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 10 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஷேன் வார்ன், மெக்ரா உள்ளிட்டோர் லஷ்மண் மற்றும் திராவிடை அசைக்க முடியவில்லை. ரிக்கி பாண்டிங் இந்த இன்னிங்ஸை வியந்து கூறும் போது, "லஷ்மண் லெக் திசையில் ஆடிய ஷாட்கள் எங்களை உண்மையில் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 2 நாட்கள் அவருக்கு பந்து வீசினோம், ஆனால் அவரை வீழ்த்த்தும் வழிவகை தெரியாமல் திண்டாடினோம்” என்றார்.

ஷேன் வார்ன் அந்த இன்னிங்சைப் பற்றிக் கூறும்போது, “எதிர்முனை பவுலர் காலடித் தடங்களில் பிட்ச் செய்து அவருக்கு பல பந்துகளை வீசினேன், ஆனால் லஷ்மணோ அசராமல் கவர் திசையிலும் மிட்விக்கெட்டிலும் அதனி அடித்து நொறுக்கினார். அவருக்கு பந்து வீசுவது கடினம் என்பதை நான் உணர்ந்த தருணம் அது” என்றார்.

லஷ்மணின் அறைத் தோழராக இருந்த ஜாகீர் கான், அத்தருணத்தில் லஷ்மண் முதுகு வலியால் அவதியுற்று வந்ததையும் வெறும் தரையில் படுத்ததையும் சுட்டிக் காட்டினார். அவரால் நேராக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் ஜாகீர் கான் அந்த இமாலய இன்னிங்ஸுக்கு பிறகு தெரிவித்தார்.

இந்த 50 ஆண்டுகால சிறந்த 50 பேட்டிங், பவுலிங் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் ஒரு இன்னிங்ஸ் கூட இடம்பெறாதது சச்சின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும்.

ஆனால், சேவாக், ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், கபில்தேவ், அனில் கும்ளே, ஹர்பஜன் சிங், பகவத் சந்திரசேகர், மொஹீந்தர் அமர்நாத் ஆகியோரது சிறந்த ஆட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்த 50 டாப் லிஸ்டில் பிரையன் லாரா 4 இடத்தில் இடம்பெறுகிறார். அவரது 400, 375, 153, இலங்கைக்கு எதிராக முத்தையா முரளிதரன் உச்சத்தில் இருந்த போது அதுவும் மே.இ.தீவுகள் 3-0 என்று உதை வாங்கிய தொடரில் இலங்கை மண்ணில் லாரா இரு இன்னிங்ஸ் சதத்துடன் 600க்கும் மேல் ரன்கள் குவித்ததும் இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் இயன் போத்தம் இந்தப் பட்டியலில் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளார்.

டாப் 10-ல் பேட்டிங் ஆதரவு ஆட்டக்களத்தில் கடுமையான வேகத்தில் வீசி ஓவலில் 1976-ம் ஆண்டு மைக்கேல் ஹோல்டிங் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியதும், ரிச்சர்ட் ஹேட்லி, பாப் மேஸி, முத்தையா முரளிதரன், கிரகாம் கூச், கேரி சோபர்ஸ் ஆகியோரது சிறந்த ஆட்டங்களும் டாப்-10ல் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒட்டுமொத்த 50 சிறந்த ஆட்டங்கள் பற்றிய பட்டியலில் மே.இ.தீவுகள் வீரர்கள் 14 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். அதிக இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே அணியாக மே.இ.தீவுகள் இந்தப் பட்டியலில் திகழ்கிறது.

தேர்வாளர்கள் பட்டியலில் கிரெக் சாப்பல், ஜான் ரைட், டோனி கோசியர், மார்க் நிகலஸ், சஞ்சய் மஞ்சுரேக்கர், மைக் செல்வி, ரமீஸ் ராஜா, ஸ்கைல்ட் பெரி, ஆஸ்மான் சைமுதீன், ஜிடியான் ஹெய் ஆகியோர் உட்பட மேலும் பலரும் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்