ஐஎஸ்எல்: கொல்கத்தா அணியை வாங்க முடியாததால் ஷாருக் கான் வருத்தம்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்குவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அதை வாங்க முடியாமல்போனது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது என பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஐஎஸ்எல் போட்டியில் பங்கெடுக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். கால்பந்து அணிக்கு உரிமையாளராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கொல்கத்தா அணியை வாங்குவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

கொல்கத்தா அணியை வாங்க முடியாவிட்டால் வேறு எந்த நகரத்தைச் சேர்ந்த அணியையும் என்னால் வாங்க முடியாது. அதனால் ஐஎஸ்எல் போட்டியில் கொல்கத்தா அணியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் சந்தித்தேன். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் கொல்கத்தா அணியை வாங்கிவிட்டனர்.

பின்னர் வேறு ஏதாவது ஒரு நகரத்தைச் சேர்ந்த அணியை வாங்கிக்கொள்ளுமாறு ஐஎஸ்எல் தரப்பு என்னிடம் கூறியது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். கொல்கத்தா அணியை வாங்கியிருக்கும் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஷாருக் கான், “கொல்கத்தா அணியை வாங்குவதற்கு என்னைவிட அவர்தான் தகுதியானவர். அவர்தான் அந்த அணியை வைத்திருக்க வேண்டும். அவருடன் நான் போட்டியிட முடியாது. கங்குலிக்கும், ஐஎஸ்எல் போட்டியில் இணைந்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள். கொல்கத்தா அணியை வாங்க முடியாதது இன்றும் வருத்த மாகத்தான் இருக்கிறது. நான் ஐபிஎல் போட்டியில் அணியை வாங்கியபோது ஐபிஎல் பாணியிலான போட்டிகள் கால் பந்திலும் நடத்தப்படும் என எனக்கு தெரிவிக்கப்பட்டது. கால் பந்தை மிகவும் நேசிக்கிறேன். விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது மகன் கால்பந்து விளையாடுகிறான். எனது மகள் கால்பந்து அணிக்கு கேப்டனாக இருக்கிறார்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE