ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி சிந்துவுக்கு நேற்று ஹைதராபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து நேற்று காலை தனது பயிற்சியாளர் கோபிசந்துடன் விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் தெலங்கானா துணை முதல்வர் முகமது அலி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் வரவேற்றனர்.
பின்னர் சிந்து மற்றும் கோபிசந்த் ஆகியோர் திறந்தவெளி வாகனத்தில் விமான நிலையம் முதல் கச்சிபவுலி விளையாட்டு மைதானம் வரை ஊர்வலமாக சென்றனர். வழிநெடுகிலும் சிந்து வுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர் கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 2 மணி நேரம் வரை இந்த ஊர்வலம் நடை பெற்றது.
பின்னர் கச்சிபவுலி விளை யாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் சிந்துவும், கோபி சந்தும் பங்கேற்றனர்.
விழாவில் சிந்து பேசும்போது, “எனக்கு இவ்வளவு உற்சாக வரவேற்பு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாது. என் வெற்றிக்கு எனது பெற்றோர், பயிற்சியாளரும் என் குருவுமான கோபிசந்தின் ஊக்கமும்தான் காரணம். இந்த உற்சாகத்தை பார்க்கும் போது நான் நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களை வெல்ல வேண்டு மென தோன்றுகிறது. கட்டாயமாக வென்று மீண்டும் உங்களை சந்திப்பேன். நான் பதக்கம் வெல்ல வேண்டுமென வாழ்த்திய அனைவருக்கும் நன்றி” என்றார்.
இதைத்தொடர்ந்து தெலங் கானா முதல்வர் கே.சந்திர சேகர ராவை சிந்து, கோபிசந்த் ஆகி யோர் சந்தித்தனர். அவர்களை சந்திரசேகர ராவ் வெகுவாக பாராட்டினார். அப்போது தனது அரசு சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ரூ.5 கோடி பரிசு தொகைக்கான காசோலையை சிந்துவிடம் சந்திரசேகர ராவ் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago