1932 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்: இரு உலக சாதனை படைத்த டிட்ரிக்சன்

By பெ.மாரிமுத்து

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 1932-ம் ஆண்டு ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 14 வரை 10-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. உலகலாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 1,206 வீரர்கள், 126 வீராங்கனைகள் என மொத்தம் 1,332 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அமெரிக்கா 41 தங்கம், 32 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங் களைக் பெற்று முதலிடம் பிடித்தது. இத்தாலி 12 தங்கம், 12 வெள்ளி, 12 வெண் கலம் என 36 பதக்கங்களுடன் 2-வது இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 19 பதக்கங் களுடன் 3-வது இடத்தைப் கைப்பற்றியது.

பிரம்மாண்டமான கிராமம்

முதல்முறையாக விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக பால்ட்வின் மலை பகுதியில் 321 ஏக்கர் பரப்பளவில் 500 பங்களாக்கள் கொண்ட பிரம்மாண் டமான விளையாட்டு கிராமம் அமைக்கப் பட்டது. ஆனால் இதை முழுவதுமாக வீரர்களே ஆக்கிரமித்துக் கொண்டதால், வீராங்கனைகளுக்கு இங்கு இடம் கிடைக்க வில்லை.

இதனால் அவர்கள் ஹோட்டலிலேயே தங்க வைக்கப்பட்டனர். விளையாட்டு கிராமத்தில் மருத்துவமனை, நூலகம், அஞ்சல் அலுவலகம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன. வீரர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக 40 சமையலறைகள் இருந் தன.

இரு உலக சாதனை

அமெரிக்க வீராங்கனை யான பேபி டிட்ரிக்சன் ஈட்டி எறிதல், தடை ஒட்டத்தில் தங்கம் வென்றார். அவர் தடை ஓட்டத்தில் 11.7 விநாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனை படைத்தார். ஈட்டி எறிதலில் 43.69 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையை நிகழ்த்தினார்.

இந்தியாவுக்கு 2-வது தங்கம்

இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக ஹாக்கிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவையும் ஜப்பானை 11 -1 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து முதலிடம் பிடித்தது.

இந்தியாவின் தயான்சந்த் 12 கோல்களும், ரூப் சிங் 13 கோல் களும் அடித்து அசத்தினர். 3 நாடுகள் மட்டுமே கலந்து கொண்ட இந்த போட்டியில் ஜப்பான் 2-வது இடமும், அமெரிக்கா 3-வது இடமும் பிடித்தன.

இளம் நீச்சல் வீரர்

15 வயதை நெருங்கிய ஜப்பானின் கிடமுரா, ஆடவர் 1,500 மீட்டர் ப்ரீஸ்டைலில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த சாதனையை 1988 சியோல் ஒலிம்பிக்கில் ஹங்கேரி வீராங்கனை கிறிஸ்டினா முறியடித்தார். அவர் 200 மீட்டர் பேக் ஸ்டிரோக் போட்டியில் தங்கம் வென்றார். அப்போது அவருடைய வயது 14 ஆண்டுகள், 41 நாள்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்