சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் மீண்டும் டாப் 10-ல் சிந்து

By செய்திப்பிரிவு

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

கடந்த வாரம் வெளியான தரவரிசையில் இரு இடங்களை இழந்து 12-வது இடத்துக்கு தள்ளப்பட்ட சிந்து, ஜப்பான் ஓபனில் 2-வது சுற்றோடு வெளியேறியபோதும், தற்போது 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு மீண்டும் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவின் மற்றொரு முன்னணி வீராங்கனையான சாய்னா நெவால், தொடர்ந்து 4-வது இடத்தில் உள்ளார்.

ஆடவர் தரவரிசையைப் பொறுத்தவரையில் இந்தியாவின் காஷ்யப், குருசாய் தத் ஆகியோர் முறையே 14 மற்றும் 24-வது இடங்களில் உள்ளனர். அஜய் ஜெயராம் 4 இடங்கள் முன்னேறி 26-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜப்பான் ஓபனில் சிறப்பாக செயல்பட்ட எச்.எஸ். பிரணாய், காந்த் ஆகியோர் முறையே 14 மற்றும் 7 இடங்கள் முன்னேறி 42 மற்றும் 32-வது இடங்களைப் பிடித்துள்ளனர். ஆனந்த் பவார், சௌரப் வர்மா ஆகியோரும் தங்களின் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். பவார் 34-வது இடத்திலும், வர்மா 43-வது இடத்திலும் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்