எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டது; அணி நிர்வாகம் கேட்கும் பிட்சையே அமைத்தோம்: பிட்ச் தயாரிப்பாளர்

By எஸ்.தினகர்

புனே டெஸ்ட் இந்திய தோல்வியில் முடிந்ததையடுத்து மீண்டும் பிட்ச் சர்ச்சை எழுந்துள்ளது. புனே பிட்ச் தயாரிப்பாளர் பாண்டுரங் சல்கோங்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் கூறியவற்றை ஆதரித்த பிசிசிஐ பிட்ச் தயாரிப்பாளர் சில உண்மைகளைப் பகிர்ந்து கொண்டார்.

“உத்தரவுகள் அணி நிர்வாகத்திடமிருந்து வரும் பிறகு இது பிசிசிஐ-க்கு தெரிவிக்கப்படும். பிட்ச் தயாரிப்பாளர்கள் அணி நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும். அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, எனவே இவர்கள் தயாரிக்க விரும்பாத பிட்ச்களை தயாரிக்கும் நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “பந்துகள் கடுமையாக திரும்பும் பிட்ச்களை எப்போதும் உருவாக்க முடியாது. உதாரணமாக குளிர்காலங்களில் வட இந்தியாவில் பந்துகள் கடுமையாக திரும்பும் பிட்ச்களை உருவாக்க முடியாது. மழை காலத்திலும் இதுவே நிலைமை. பிட்சில் நிறைய ஈரப்பதம் இருக்கும் போது திரும்பும் பிட்ச்களை உருவாக்குவது முடியாத காரியம். கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற மைதானங்களில் கடுமையாக ஸ்பின் ஆகும் பிட்சைத் தயாரிக்க முடியாது. ஏனெனில் இந்த மண்ணின் தன்மை அத்தகையது. முன்னாள் இந்திய கேப்டன் தோனி, ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக பிட்ச்கள் அமைக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவந்தார்.

பொதுவாக ஒரு தொடருக்கு வெகுமுன்பாகவே பிட்ச் எப்படியிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது. அதில் வேறு போட்டிகள் நடைபெறாது. இந்தப் பிட்சில்தான் நாங்கள் தண்ணீர் பாய்ச்சி, ரோல் செய்து கொண்டிருப்போம் ஒருவார காலத்திற்கு.

சில வேளைகளில் பிட்சின் மேற்புறத்தில் நாங்கள் தண்ணீர் பாய்ச்சவே மாட்டோம். பிறகு கொஞ்சம் தண்ணீர் காட்டுவோம். அதாவது ஒரு கேன் அளவுக்கு மட்டுமே தண்ணீர் பயன்படுத்துவோம். இதனால் பிட்சின் மேற்புற படிவு தளர்வாகும், ஸ்பின்னர்களுக்கு பந்து நின்று திரும்பும் இது இன்னமும் அபாயகரமானதாகும்.

எனவே குறைந்த தண்ணீர் மற்றும் ரோலிங் இன்மை ஆகியவை முக்கிய அம்சங்களாகும். ஆட்டம் போகப்போக இதனால் பிட்சில் ஏற்படும் பந்து வீச்சாளர்கள் கால் தடங்கள் மற்றும் பிளவுகளும் பந்துகளை நின்று திரும்பச் செய்வதாகும். தூசியான பிட்சின் மேற்பரப்பு, களத்தில் பிளவுகள் ஆகியவை ஸ்பின்னர்களுக்கு அவர்களது உண்மையான திறமையையும் மீறிய உதவியைச் செய்யக்கூடியது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஸ்பின் ஆகும் மேற்பரப்பு இடப்பட்டது, இதனால் இந்திய அணி வென்றது, ஆனால் புனேயில் இது நம் அணிக்கே வினையை வைத்து விட்டது.

நாங்கள் பொதுவாக சமச்சீரான பவுன்சுடன் கூடிய 5 நாட்களில் படிப்படியாக பின்னடைவு காணும் பிட்ச்களையே தயாரிப்போம். இதில் பேட்ஸ்மென்கள், பவுலர்கள் ஆகியோருக்கு சரிசமமான வாய்ப்புகள் இருக்கும்” என்றார்.

முன்னாள் வீரர் மொஹீந்தர் அமர்நாத் கூறும்போது, “புனே ரக பிட்ச்கள் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. நல்ல டெஸ்ட் மேட்ச் பிட்ச்களில்தான் ஆட வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்