ஆஸ்திரேலிய ஓபன்: பூபதி, யூகி இணைகள் முன்னேற்றம்

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மகேஷ் பூபதி மற்றும் யூகி பாம்ப்ரி ஆகியோரது இணைகள் முன்னேறியுள்ளன.

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - அமெரிக்காவின் ராஜீவ் ராம் இணை, தமது முதல் சுற்றில் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் சன்டியாகோ ஜிரால்டோ-போர்ச்சுகலின் ஜோவ் சௌசா இணையைத் தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

மற்றொரு ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் இணை 6-2, 7-5 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டா அகட் - டேனியல் ஜிமெனோ டிரேவர் இணையைத் தோற்கடித்தது.

அதேவேளையில், மற்றொரு ஆடவர் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் சரண் - சீன தைபேவின் யென் சூன் லூ இணை 2-6, 4-6 என்ற நேர் செட்களில் ஸ்வீடனின் ஜோஹன் புரூன்ஸ்ட்ரோம் - டென்மார்க்கின் ஃபிரெட்ரிக் நீல்சன் ஜோடியிடம் தோல்வி கண்டது. திவிஜ் சரணுக்கு இதுதான் அறிமுக கிராண்ட்ஸ்லாம் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்