டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸி. பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட் செய்த நெதர்லாந்து அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீபன் மைபர்க் 23 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த பேரஸி 4 ரன்களிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மைக் கேல் ஸ்வார்ட் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, அந்த அணி 12.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு இணைந்த கேப்டன் போரனும், டாம் கூப்பரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். போரன் 35 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டாம் கூப்பர் 23 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் சேர்க்க, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது நெதர்லாந்து.
இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 9 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில்லி யம்சன் 22 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
பின்னர் வந்த ராஸ் டெய்லர் 18 ரன்களில் விக்கெட்டை இழந்தபோதிலும், கேப்டன் மெக்கல்லம் 45 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.
இறுதியில் அந்த அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
ஆண்டர்சன் 20, நீஷம் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரென்டன் மெக்கல்லம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
இன்றைய ஆட்டங்கள்:
வங்கதேசம்-பாகிஸ்தான்
இடம்: மிர்பூர்
நேரம்: பிற்பகல் 3
ஆஸ்திரேலியா-இந்தியா
இடம்: மிர்பூர்
நேரம்: இரவு 7
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago