இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறியிருந்தாலும், 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்கும் என உலகக் கோப்பை போட்டியின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஜான் ஹார்டன் தெரிவித்துள்ளார்.
ஊதியக் குறைப்பு விவகாரத்தில் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான தொடரை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி.
இதனால் அந்த அணி வரும் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுமா? அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியில் பங்கேற் குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் ஹார்டன் மேலும் கூறியிருப்பதாவது: ஊதியக் குறைப்பு தொடர்பாக வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் இடையே ஏற்பட்ட பிரச் சினையை விரைவாக தீர்ப்பதற்கு அனைவரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். உலகக் கோப்பை போட்டிக்கு இன்னும் 108 நாட்கள் இருக்கின்றன. உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பங்கேற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago