நான்காவது ஒலிம்பிக் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 1908-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 187 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டி முதலில் இத்தாலி தலை நகர் ரோமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் போட்டிக்கான பணி கள் நடைபெற்று வந்த நிலையில் வேஸூவியூஸ் எரிமலை வெடித் ததால் இத்தாலியின் நேபிள்ஸ் நகர் மிகப்பெரிய பாதிப்புக்குள் ளானது. அதை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற் பட்டதால் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங் கியது இத்தாலி.
இதையடுத்து ஒலிம்பிக் போட் டியை நடத்தும் வாய்ப்பு லண்ட னுக்கு கிடைத்தது. 2 ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிக்கான மைதானங்கள் தயாரானது. 22 நாடுகளில் இருந்து 1971 வீரர்கள், 37 வீராங்கனைகள் என மொத்தம் 2008 பேர் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை.
இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதல் 3 இடங்களைப் பிடித்த வர்களுக்கு முதல்முறையாக பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கு முன்பு வரை பட்டயமே வழங்கப் பட்டு வந்தது. போட்டியை நடத் திய இங்கிலாந்து 56 தங்கம், 51 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலி டத்தைப் பிடித்தது.
அமெரிக்கா 23 தங்கம், 12 வெள்ளி, 12 வெண் கலம் என மொத்தம் 47 பதக்கங்களுடன் 2-வது இடத்தை யும், ஸ்வீடன் 8 தங் கம், 6 வெள்ளி, 11 வெண்கலம் என 25 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன.
பதக்கம் வென்ற அண்ணன், தங்கை
இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான சார்லோட்டே டாட், 1908 ஒலிம்பிக்கில் வில்வித்தைப் போட் டியில் கலந்துகொண்டு வெள்ளி வென்றார். அவருடைய சகோதரர் வில்லியம் டாட் ஆடவர் வில் வித்தையில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் அண்ணன், தங்கை என்ற பெருமை சார்லோட்டே, வில்லியம் ஆகியோருக்கு கிடைத்தது.
டென்னிஸ் வீராங்கனையான சார்லோட்டே, விம்பிள்டனில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 1887-இல் முதல் முறையாக விம்பிள்டனில் சார் லோட்டே சாம்பியன் ஆனபோது, அவருக்கு வயது 15. இன்றள விலும் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமை சார்லோட்டேவின் வசமே உள்ளது. டென்னிஸ் வீராங்கனையான அவர் வில் வித்தையிலும் அதீத ஆர்வம் கொண்டவர்.
இந்த ஒலிம்பிக்கில் முதல் முறையாக டைவிங் போட்டி சேர்க்கப்பட்டது. இரண்டு பிரிவு களில் போட்டி நடத்தப்பட்டது. 9 நாடுகளைச் சேர்ந்த 39 வீரர்கள் இதில் பங்கேற்றனர். 3 மீட்டர். ஸ்பிரிங் போர்டு பிரிவில் ஜெர்மனி யின் ஆல்பர்ட் சுர்னரும், 10 மீட்டர் பிளாட்பார்ம் பிரிவில் ஸ்வீடனின் ஜல்மார் ஜோஹன்ஸனும் தங்கம் வென்றனர்.
மாரத்தானில் சர்ச்சை
1904-ம் ஆண்டு ஒலிம்பிக் போட் டியை போன்று இந்த ஒலிம்பிக் கிலும் மாரத்தான் போட்டியின் போது சர்ச்சை ஏற்பட்டது. இதில் முதலில் வந்தவரான இத்தாலியின் டொரன்டோ பியட்ரி, இலக்கை நெருங்கியபோது கீழே விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த காவலர் களின் உதவியுடன் இலக்கை எட்டினார் பியட்ரி.
அதன் காரணமாக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 2-வது இடம்பிடித்தவரான அமெ ரிக்காவின் ஜானி ஹேய்ஸ் முத லிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட் டது. ஆனால் அடுத்த நாளே வெள்ளி முலாம் பூசிய கோப்பை யை பியட்ரிக்கு பரிசளித்தார் இங்கி லாந்து ராணி அலெக்ஸ்சான்ட்ரா.
அணிவகுப்பு புறக்கணிப்பு
1908-ல் பின்லாந்து, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அத னால் அணிவகுப்பின் போது பின் லாந்து வீரர்கள் ரஷ்ய கொடியை ஏந்திச் செல்வார்கள் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் களில் பெரும் பாலானோர் எந்தக் கொடியும் இல்லாமல் அணிவகுப் பில் கலந்து கொண்டனர். அமெரிக்காவின் தேசியக் கொடி, ஒயிட் சிட்டி மைதானத்தில் பறக்கவிடப் படவில்லை. அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அணிவகுப்பில் அந்த அணியினர் கலந்து கொள்ளவில்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago