ரஷ்யன் கிராண்ட் பிரீயில் ஹாமில்டன் சாம்பியன் - தொடர்ந்து 4-வது வெற்றி

By ஏஎஃப்பி

பார்முலா ஒன் கார் பந்தயத்தின் 16-வது சுற்றான ரஷ்யன் கிராண்ட்பிரீ போட்டியில் மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் பெற்றுள்ள 4-வது தொடர் வெற்றியாகும்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் 309.73 கி.மீ தூரத்தை 1 மணி நேரம் 31 நிமிடம் 50.74 விநாடிகளில் ஹாமில்டன் கடந்து முதலிடம் பிடித்தார். மொத்தம் 21 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். ஹாமில்டனை விட 13.6 விநாடிகள் பின்தங்கி இலக்கை எட்டிய ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பர்க் 2-வது இடத்தைப் பிடித்தார். இவரும் மெர்சிடஸ் அணியைச் சேர்ந்தவர்தான்.

இந்தியாவைச் சேர்ந்த போர்ஸ் இண்டியா அணி வீரர்கள் செர்ஜியோ பெரேஸ், ஹல்கென்பர்க் ஆகியோரும் இந்த போட்டியில் பங்கேற்றனர். அவர்கள் முறையே 10, 12-வது இடத்தைப் பிடித்தனர். பார்முலா ஒன் சாம்பியன்ஷிப் முடிவு தெரிய இன்னும் 3 சுற்றுகளே மீதமுள்ளன. இப்போதைய நிலையில் ஹாமில்டன் 291 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ராஸ்பர்ஸ் 274 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ரிச்சயர்டோ 199 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி அமெரிக்காவில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்