முதல் கிராண்ட்ஸ்லாம் பைனலில் ‘வாவ்’ரிங்கா

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் 8-ம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது முதல்முறையாகும். மெல்போர் னில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் வாவ்ரிங்கா 6-3, 6-7 (1), 7-6 (3), 7-6 (4) என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை தோற்கடித்தார்.

ஒரெயொரு பிரேக்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஒரேயொரு பிரேக் மட்டுமே செய்யப்பட்டது. அதுவும் முதல் செட்டில் பெர்டிச்சின் சர்வீஸை வாவ்ரிங்கா முறியடித்ததுதான்.

3 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் அபாரமாக ஆடினர். இதனால் டைபிரேக்கர் வரை சென்ற அந்த செட்டில் அபாரமாக ஆடிய பெர்டிச், அந்த செட்டை 7-6 (1) என்ற கணக்கில் வென்றார்.இதையடுத்து நடைபெற்ற 3 மற்றும் 4-வது செட்கள் டைபிரேக்கர் வரை சென்றபோதும் விடாப்பிடியாக போராடிய வாவ்ரிங்கா, அந்த செட்களை 7-6 (3), 7-6 (4) என்ற கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றியில் முடித்தார்.

முதல் செட் 31 நிமிடங்களும், 2-வது செட் 56 நிமிடங்களும், 3-வது செட் 55 நிமிடங்களும் நடைபெற்றன. கடைசி செட் ஒரு மணி நேரம், 9 நிமிடங்கள் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் தாமஸ் பெர்டிச் 21 ஏஸ் சர்வீஸ்களையும், வாவ்ரிங்கா 18 ஏஸ் சர்வீஸ்களையும் விளாசினர். வாவ்ரிங்கா 4 டபுள் பால்ட் தவறுகளையும், தாமஸ் பெர்டிச் 7 டபுள் பால்ட் தவறுகளையும் செய்தனர். வாவ்ரிங்கா அதிகபட்சமாக மணிக்கு 217 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தார். பெர்டிச் அதிகபட்சமாக மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தார்.

வியப்பாக இருக்கிறது

வெற்றி குறித்துப் பேசிய வாவ்ரிங்கா, “என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் வரவில்லை. மிகவும் வியப்பாக இருக்கிறது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலேயே ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். மிகுந்த ஆக்ரோஷமுடன் விளையாடினேன். தாமஸ் பெர்டிச்சுக்கு எதிராக ஆரம்பத்தி லேயே ஆதிக்கம் செலுத்துவது முக்கியமானது” என்றார்.

இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அல்லது சகநாட்டவரான ரோஜர் ஃபெடரரை சந்திப்பார் வாவ்ரிங்கா.

லீ நா-சிபுல்கோவா மோதல்

மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நாவும், 20-ம் நிலை வீராங்கனையான ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவும் சந்திக்கின்றனர். வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் டொமினிகா சிபுல்கோவா 6-1, 6-2 என்ற நேர் செட்களில் 5-ம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார். முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார் சிபுல்கோவா.

லீ நாவுக்கு வாய்ப்பு

மற்றொரு அரையிறுதியில் சீனாவின் லீ நா 6-2, 6-4 என்ற நேர் செட்களில் 30-ம் நிலை வீராங்கனையான கனடாவின் யூஜீனி புச்சார்டை தோற்கடித்தார். கடந்த 30 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் கனடா வீராங்கனை புச்சார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி வீராங்கனைகளான செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன் அசரென்கா, மரியா ஷரபோவா, அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோர் வெளியேறி விட்டதால், ஆஸ்திரேலிய ஓபனில் லீ நா தனது முதல் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் அவர் பட்டம் வெல்லும் பட்சத்தில் இது அவருடைய 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். முன்னதாக 2011-ல் நடைபெற்ற பிரெஞ்சு ஓபனில் லீ நா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் சானியா ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்த ஜோடி தங்களின் காலிறுதியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பாகிஸ்தானின் குரேஷி-ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ் ஜோடியைத் தோற்கடித்தது. சானியா ஜோடி தங்களின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜர்மிலா-மேத்யூ எப்டன் ஜோடியை சந்திக்கிறது.

மற்றொரு கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஸ்லோவேகியாவின் டேனிலா ஹன்ட்சோவா ஜோடி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கிறிஸ்டினா-கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடியிடம் தோல்வி கண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்