உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் அரையிறுதியை எட்டிய நெதர்லாந்து, யூரோ கால்பந்து தகுதிச் சுற்றில் ஐஸ்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலக்கிய அர்ஜென் ரூபன், வான் பெர்சி ஆகியோர் இருந்தும் ஐஸ்லாந்திடம் வாழ்நாளின் முதல் தோல்வியைச் சந்தித்தது நெதர்லாந்து.
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் ஐஸ்லாந்திடம் 2-0 என்று அதிர்ச்சி தோல்வியடைந்தது நெதர்லாந்து.
ஐஸ்லாந்திடம் முதன் முதலாக தோல்வி அடைந்துள்ளது நெதர்லாந்து. ஜில்ஃபி சைகுர்ட்சன் என்ற வீரர் 10வது நிமிடத்தில் பெனால்டி ஸ்பாட் கிக் மூலமும், பிறகு 42-வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலையும் அடித்தார்.
இதன் மூலம் குரூப் ஏ-யில் செக்.குடியரசுடன் ஐஸ்லாந்து முதன்மை நிலை வகிக்கிறது. ஏற்கனவே செக்.குடியரசிடம் தோல்வி அடைந்த நெதர்லாந்து ஐஸ்லாந்திடமும் தோல்வி கண்டு மொத்தம் 3 புள்ளிகள் மட்டுமே இதுவரையிலும் பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டம் ஐஸ்லாந்தின் வரலாற்றில் இடம் பெற்ற வெற்றியாகும். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பந்தை தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர் ஐஸ்லாந்து வீரர்கள்.
ஆட்டத்தின் 10வது நிமிடம் நெருங்கும் சமயத்தில் ஐஸ்லாந்து வீரர்கள் பந்தை விறுவிறுவென நெதர்லாந்து கோல் அருகில் கொண்டு செல்ல ஐஸ்லாந்து வீரர் பியார்னசன் பந்தைத் தொட்டால் போதும் கோல் ஆகிவிடும் நிலையில் நெதர்லாந்து வீரர் கிரிகரி வான் டெர் வியெல் குறுக்காகப் புகுந்து காரியத்தைக் கெடுக்க நடுவர் ஐஸ்லாந்துக்குச் சாதகமாக பெனால்டி தீர்ப்பளித்தார்.
கோல் கீப்பர்களின் உலகக் கோப்பையான பிரேசில் உலகக் கோப்பைப் போட்டிகளில் ஜாஸ்பர் சிலிசன் அருமையாக கோல் தடுப்பு செய்தார். ஆனால் நேற்று சைகுர்ட்சன் அடித்த ஷாட்டை அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோல் ஆனது.
அர்ஜென் ரூபன் ஒரு முறை பந்தை எடுத்துச் சென்றார் ஆனால் அவருக்கு நெதர்லாந்தின் மற்ற வீரர்கள் உதவவில்லை. டேலி பிளைண்ட் அடித்த அருமையான கிராஸை அர்ஜென் ரூபன் கோலுக்கு வெளியே அடித்து வாய்ப்பைத் தவற விட்டார்.
இதன் பிறகே சைகுர்ட்சன் ஐஸ்லாந்துக்காக தனது 2வது கோலை அபாரமாக அடித்தார். இடைவேளைக்குப் பிறகு 2 வாய்ப்புகள் கிடைத்தும் கோட்டைவிட்டது நெதர்லாந்து.
இரு அணிகளும் 11 முறை சந்தித்துக் கொண்டதில் முதல் முறையாக ஐஸ்லாந்திடம் தோல்வி தழுவியுள்ளது நெதர்லாந்து.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago