ஜெயசூரியாவின் அதிவேக சத சாதனையை முறியடிக்கத் தவறிய இலங்கை வீரர் செகுகே பிரசன்னா

By இரா.முத்துக்குமார்

அயர்லாந்துக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது.

இதில் டப்ளினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நேற்று இலங்கை அணி வீரர் செகுகே பிரசன்னா 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 95 ரன்கள் விளாசினார், இதன் மூலம் ஜெயசூரியாவின் 48 பந்துகளில் சதம் என்ற சாதனையை செகுகே முறியடிக்க முடியாமல் போனது.

செகுகே பிரசன்னாவின் ஒருநாள் கிரிக்கெட் சராசரி இதுவரை 9.19 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று திடீரென அவர் 3-ம் நிலையில் களமிறக்கப்பட்டார்.

இறங்கியவுடன் முதல் பந்திலேயே தனது நோக்கத்தை அவர் அறிவித்தார். அயர்லாந்து ஆஃப் ஸ்பின்னர் ஆண்டி மெக்பிரைன் பந்தை தூக்கி வீச லாங் ஆஃபில் சிக்ஸுக்குப் பறந்தது. குசல் பெரேரா (135), குணதிலக (63) இணைந்து முதல் விக்கெட்டுக்காக 26.2 ஓவர்களில் 147 ரன்களைச் சேர்த்து அடித்தளம் அமைக்க செகுகே பிரசன்னா முதல் பந்திலிருந்தே வன்முறையான ஆட்டத்தைத் தொடங்கினார்.

அதாவது டைமிங் மற்றும் பவர்தான் பேசியது. ஒவ்வொரு லெக் திசை ஷாட்டும் அவரது லெக் திசை வலுவை நிரூபித்தது. பாய்ட் ரான்கின் பந்தை சேவாக் பாணியில் (அதாவது 2003 உலகக்கோப்பையில் கில்லஸ்பியை ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்தாரே சேவாக் அது போன்று) ஸ்கொயர் லெக்கில் அடித்த சிக்ஸ் அபாரமானது. குறிப்பாக அங்கு ஆள் நிறுத்தப்பட்டிருந்தும் சிக்ஸுக்குப் பறந்தது.

தொடர்ந்து இவ்வாறாக அராஜகமாக மட்டையை அவர் சுழற்றினார், ஆனால் 10-வது சிக்ஸ் முயற்சியில் அவர் டிம் முர்டாகிடம் பவுல்டு ஆனார். 46 பந்துகளில் 95 ரன்கள், ஜெயசூரியாவின் 48 பந்து சத சாதனை முறியடிப்பைத் தவற விட்டார் செகுகே.

முன்னதாக குசல் பெரேரா 128 பந்துகளில் 16 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 135 ரன்களையும், குணதிலக 63 ரன்களையும் எடுத்தனர். மீண்டும் அணிக்கு வந்த ஆல்ரவுண்டர் மஹரூஃப் 29 ரன்களையும், கேப்டன் ஆஞ்சேலோ மேத்யூஸ் 24 ரன்களையும் எடுக்க 50 ஓவர்களில் 377/8 என்று இலங்கை அணி உச்சத்தில் இருந்தது. இது இலங்கை அணியின் 4-வது பெரிய ரன் எண்ணிக்கையாகும். 2வது விக்கெட் விழும்போது இலங்கை ஸ்கோர் 308. 2-வது விக்கெட் விழுவதற்கு முன்பாக 300 ரன்களை 5-வது முறையாகக் கடந்துள்ளனர்.

தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணியில் மெக்பிரைன் மட்டுமே அதிரடியில் 64 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 79 ரன்களை அதிகபட்சமாக எடுத்தார். 45 ஓவர்களில் அயர்லாந்து 241 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி தழுவியது. சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளையும், பந்து வீச்சிலும் செகுகே பிரசன்னா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடரை இலங்கை 2-0 என்று கைப்பற்றியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்