இந்திய ஆடவர் ஹாக்கி அணி நல்ல நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கக் காரணமான பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் திடீரென்று தன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.
இந்திய ஹாக்கி அமைப்போ, விளையாட்டுத்துறை அதிகாரிகளோ இந்திய ஹாக்கியின் நன்மைக்காகவோ, ஹாக்கி வீரர்களின் நன்மைக்காகவோ செயல்படுவதாகத் தனக்குத் தெரியவில்லை என்று கூறி அவர் பொறுப்பை உதறினார்.
இது குறித்து அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”இந்தியாவின் விளையாட்டுத் துறை அதிகாரிகளின் முடிவெடுக்கும் தன்மைகளுடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை. மிகவும் கடினமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, அதிகார அமைப்பிலும், முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய ஹாக்கி மற்றும் இந்திய ஹாக்கி வீரர்களின் நீண்ட கால நன்மையை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை. எனவே இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.”என்று இந்திய விளையாட்டு ஆணைய தலைமை இயக்குநர் ஜீஜி தாம்சனுக்கு எழுதிய ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago