இந்தியா மீண்டும் கோப்பையை வெல்லும்

By செய்திப்பிரிவு

2015-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்லும் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு புதன்கிழமை அன்று 500 நாள்களே இருந்த நிலையில், சச்சின் மேலும் கூறியிருப்பதாவது: அடுத்த உலகக் கோப்பை போட்டிக்குப் பிறகும் இந்திய துணைக் கண்டத்திலேயே கோப்பை இருக்கும். தோனி தலைமையிலான இந்திய அணி, தொடர்ந்து 2-வது முறையாக கோப்பையை வென்று அந்தச் சாதனையை செய்த 3-வது அணி (மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக) என்ற பெருமையைப் பெறும். இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை அணிகளும் சிறந்த அணிகள்தான். எனது ஆதரவு இந்திய அணிக்குத்தான்.

உலகக் கோப்பையில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். இந்தியா மீண்டும் கோப்பையை வென்றால், அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்திய அணி மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என 100 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களைப் போலவே நானும் இந்தியா கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

அடுத்த உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய சூழலுக்கு ஏற்றவாறு இந்திய வீரர்கள் விரைவாக பொருந்திவிடுவார்கள் என்று கூறிய சச்சின், "இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள், ஆஸ்திரேலியாவில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்" என்றார்.

நியூஸிலாந்து சூழலில் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளது குறித்து கவலை தெரிவித்த சச்சின், "1992 உலகக் கோப்பையில் நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் அந்நாட்டு அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியதை இங்கு நினைவுகூர்கிறேன். அப்போது அங்கு கடும் குளிரும் கடுமையான காற்றும் இருந்தது. காற்றடித்த திசையில் பந்தை அடித்தால், அது 9 மீ. தூரம் சென்றது. காற்றுக்கு எதிராக பந்தை அடிக்கும்போது 9 மீ. தூரத்துக்கு குறைவாகவே சென்றது. 2014-ல் இந்திய அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

அந்தத் தொடர் இந்திய வீரர்களுக்கு நல்ல அனுபவத்தைக் கொடுக்கும். அப்போது அங்குள்ள சூழல்களை இந்திய வீரர்கள் நன்றாக அறிந்து கொள்வார்கள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்