இங்கிலாந்துக்கு ஆறுதல்: மகளிர் அணி ஆஷஸ் கோப்பையை வென்றது

By செய்திப்பிரிவு

மகளிருக்கான ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வென்று கோப்பையை கைப்பற்றியது.ஆண்களுக்கான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து மகளிர் அணியினர் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளனர்.

மகளிருக்கான ஆஷஸ் போட்டியில் ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடைபெறுவது வழக்கம். இதில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. பெர்த்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 201 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. அடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 190 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 185 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் 123 ரன்களுக்கு சுருண்டனர். இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

இரு அணிகளுக்கும் இடை யிலான ஒருநாள் கிரிக்கெட் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்