ஞாயிறன்று யூரோ 2016 கால்பந்து காலிறுதியில் பிரான்ஸ் அணியை ஐஸ்லாந்து அணி எதிர்கொள்கிறது, அன்று இங்கிலாந்தை தோற்கடித்து அதிர்ச்சியளித்த ஐஸ்லாந்து அணியை முறியடிக்க பிரான்ஸ் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 ஐஸ்லாந்து வீரர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
யார் அந்த 5 வீரர்கள்?
கோல்கீப்பர் ஹால்டர்சன்:
ஹால்டர்சனுக்கு கோல் கீப்பிங் என்பது பகுதி நேர பொழுதுபோக்குதான். அவருக்கு முக்கியத் தொழில் திரைப்படங்கள் இயக்குவது, இசை வீடியோக்களை வெளியிடுவது. இந்த யூரோ 2016 தொடரில் ஹால்டர்சன் சிறந்த முறையில் கோல் கீப்பிங் செய்து வருகிறார். இங்கிலாந்தை வீழ்த்திய போட்டியில் ரஹீம் ஸ்டெர்லிங்குடன் ஏற்பட்ட மோதலில் பெனால்டி கிக்கிற்கு வழிவகுத்தாலும் ஹால்டர்சனின் பங்கு பிரான்ஸுக்கு அச்சுறுத்தல்தான்.
ரேக்னர் சைகர்ட்சன்:
இங்கிலாந்துக்கு எதிராக முதல் கோலை அடித்து ஐஸ்லாந்தை உலகறியச் செய்தவர் மேலும் இங்கிலாந்தின் கடைசி நேர சமன் முயற்சியை தனது தடுப்பாட்டத்தினால் முறியடிதவர் ரேக்னர் சைகர்ட்சன். அன்று இங்கிலாந்து தோல்வியடைந்த பிறகு அந்த அணி எப்படி ஐஸ்லாந்தை தரக்குறைவாக எடை போட முடியும் என்று உரத்த குரலில் சாடினார். ‘அவர்கள் ஏதோ லண்டன் பூங்காவில் நடைபழகுவது போல் நினைத்து விட்டனர்” என்றார். தற்போது கால்பந்து கிளப்கள் இவரை ஒப்பந்தம் செய்ய முண்டியடித்து வருகின்றன.
‘மகா த்ரோ’ மன்னன் ஆரோன் குனார்சன்:
இங்கிலாந்தை மட்டுமல்ல இந்தத் தொடரில் பக்கவாட்டு எல்லைக்கோட்டிலிருந்து தனது மிகப்பெரிய த்ரோ மூலமே அணிகளை அச்சுறுத்தி வருகிறார், விட்டால் த்ரோவையே கோலுக்குள் விட்டெறிவது போல் உள்ளது இவரது மகா த்ரோக்கள். இவரைக் கடந்து பந்தை எடுத்துச் செல்வது கடினம். இவரது லாங் த்ரோவினால் ஆஸ்திரியா, இங்கிலாந்துக்கு எதிராக கோல்கள் அடிக்கப்பட்டன. இன்னும் சொல்லப்போனால் அன்று இங்கிலாந்து இவரது த்ரோவை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தது. ஐஸ்லாந்து அணிக்காக அதிக போட்டிகளை ஆடும் 2-வது வீரராராவர் குனார்சன். பிரான்ஸ் இவரது மகா த்ரோவை எப்படி கையாளப்போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது.
கில்ஃபி சைகர்ட்சன்:
இவரை ரேக்னர் சைகர்ட்சனுடன் குழப்பிக் கொள்ள கூடாது. ஐஸ்லாந்து தடுப்பாட்டத்திலிருந்து தாக்குதல் ஆட்டம் ஆட முடிவெடுக்கும் போது கில்பி சைகர்ட்சன் அதில் முக்கியப் பங்கு வகிப்பவர். தகுதிச் சுற்றுப் போட்டிகளில் 6 கோல்களுடன் முன்னிலை வகித்தார். குறிப்பாக ஹாலந்து அணியை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்த போட்டியில் 3 கோல்கள். இந்த போட்டித் தொடரில் ஹங்கேரிக்கு எதிராக ஸ்பாட் கிக்கில் ஒரு கோல் அடித்துள்ளார். இங்கிலாந்து பிரிமியர் லீகில் ஸ்வான்சீ மற்றும் டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணிக்கு ஆடியதால் இங்கிலாந்து வீரர்கள் பற்றிய இவரது அறிவு அன்று இங்கிலாந்துக்கு எமனானது.
கோல்பீன் சிதர்சன்:
இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி கோலை அடித்தவர் கோல்பீன் சிதர்சன். அதாவது இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோ ஹார்ட் சற்றே மந்தமாகச் செயல்பட்டதால் அதனை பயன்படுத்திக் கொண்டார். பெரிய அணிகளை அதிர்ச்சித் தோல்வியுறச் செய்யும் ஆற்றல் கொண்டவர் இவர். ஐஸ்லாந்து அணிக்காக இதுவரை 21 கோல்களை அடித்துள்ளார். இவரும் பிரான்ஸுக்கு எதிராக முன்னணி வீரராகக் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
3 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago